பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ரூ 1 லட்சம் மானியம் கிடைக்குமே!
சென்னை: பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 10ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட சமூகநல அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் அறிவிப்பின்படி, சென்னையில் பிங்க் ஆட்டோக்களை மானிய விலையில் பெறுவதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் உள்ள 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப காலம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இந்த ஆட்டோக்கள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முற்றிலும் பெண்களாலேயே இயக்கப்படும். இதனால் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி, பெண்களுக்கான உதவி எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோ திட்டத்திற்காக மொத்தமாக ரூ 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிங்க் ஆட்டோக்களை மானியத்துடன் வாங்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டோக்களை பெற தகுதியானவர்கள்- பெண்கள் மட்டும்தான், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சென்னையில் குடியிருக்க வேண்டும். CNG/Hybrid ஆட்டோ வாங்க தமிழக அரசு ரூ 1 லட்சத்தை மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்குவதற்கு தேவையான மீதி பணத்தை வங்கிகளில் கடனாக பெறவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
இந்த ஆட்டோக்களை மானிய விலையில் பெற குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை பெற வேண்டிய முகவரி:
சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு அல்லது தெற்கு),
8ஆவது தளம்,
சிங்காரவேலர் மாளிகை,
சென்னை - 600001. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications