"ஆடிட்டர்"தான் காரணமாமே.. சசிகலா எடுத்த கடைசி அஸ்திரம்.. கனக்கச்சிதமாக நகரும் "போயஸ்" பாலிட்டிக்ஸ்
சசிகலா ரஜினியை சந்திக்க சிலர் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுகவை கைப்பற்ற சசிகலா கையில் எடுத்துள்ள கடைசி அஸ்திரம், அவருக்கு போதுமான பலனை பெற்று தரும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்களாம்.. இந்த கடைசி அஸ்திரத்தை சசிகலா கையில் எடுக்க, என்னென்ன வழிகளை மேற்கொண்டார் என்பது குறித்த தகவல்கள் தற்போது லேசாக கசிந்து வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், பாஜக மேலிடத்தை பகைத்து கொண்டு அரசியல் செய்யும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதேசமயம், அதிமுகவை கைப்பற்றிவிட வேண்டும் என்று இத்தனை நாளும் காத்து கிடந்த சசிகலாவின் முயற்சிக்கு, ஓரளவுதான் பலன் கிடைத்துள்ளது..

பாஜக
ஆனாலும் கட்சியை தான் நினைத்தது போல கைப்பற்ற முடியவில்லை எதிர்பார்த்த முக்கிய நிர்வாகிகள், மாஜிக்கள் சசிகலாவுக்கு நேரடியாக ஆதரவும் தரவில்லை.. ஒருங்கிணைப்பாளர் தேர்தலையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்கிவிடுவதால் கவலையிலேயே இருந்துள்ளார் சசிகலா.. அதுமட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே, சசிகலாவின் 2வது இன்னிங்ஸ் அரசியலுக்காக "ஆடிட்டர்" ஒருவர் டெல்லியில் சில முயற்சிகளை எடுத்து வந்து கொண்டிருந்தாராம்.. ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என தெரிகிறது..

சசிகலா
எனவே, டெல்லியின் ஆதரவை தன்னால் பெற முடியவில்லை என்பதை வெளிப்படையாகவே சசிகலாவிடம் சொல்லிய அந்த ஆடிட்டர், ரஜினியின் உதவியை நீங்கள் நாடலாமே, அவரை சந்திக்க முயற்சி செய்யுங்கள் என்று ஒரு ஐடியாவையும் தந்திருக்கிறார்.. மேலும், டெல்லியின் ஆதரவு இல்லாமல், அதிமுகவை கைப்பற்ற முடியாது என்கிற அரசியலையும், அதனை மையப்படுத்தி ரஜினியிடம் என்னென்ன விசயங்களைப் பேசலாம் என்றும் சசிகலாவுக்கு அந்த "ஆடிட்டர்" விரிவாக எடுத்துரைத்தாராம்.

சந்திப்பு
இதற்கு பிறகுதான், ரஜினியை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார்.. இந்த சந்திப்பினால், வேறு வழியில்லாமல் அதிமுகவே வாயடைத்து போகும் என்றும் நம்பி உள்ளார்.. அதன்படியே, தன்னுடைய கடைசி அஸ்திரத்தை பயன்படுத்த, லதா ரஜினிகாந்த்திடம் பேசியுள்ளார்.

லதா
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்த காலத்தில், லதாவிடம் நெருக்கமாக பேசும் நட்பு சசிகலாவுக்கு உண்டு... பல்வேறு சந்தர்ப்பங்களில் லதாவுக்கு பல வகையான உதவிகளை செய்தவர்தான் சசிகலா... அந்த வகையில், சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து தி.நகர் இல்லத்தில் சசிகலா தங்கியிருந்த போதுகூட, சசிகலாவின் உடல்நலனை விசாரித்திருக்கிறார் லதா... ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி சசியும், லதாவும் அப்போதே விவாதித்தும் இருக்கிறார்கள்.. அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் நட்பு உண்டு.
Recommended Video

ஆடிட்டர்
அந்த வகையில்தான், உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று லதாவிடம், சசிகலா கேட்டதாக தெரிகிறது.. உடனே அதற்கு ஒப்புக்கொண்டு ரஜினியிடம் லதா பேச, ரஜினியும் ஓகே சொல்ல, சந்திப்பு உடனடியாக நடந்திருக்கிறது.. சந்திப்பின்போது, "ஆடிட்டர்" தன்னிடம் சொன்ன விவரங்கள் அத்தனையும் ரஜினியிடம் ஒன்றுவிடாமல் சசிகலா எடுத்து சொல்லி, தான் அதிமுகவிற்குள் நுழைய டெல்லியிடம் பேசுமாறு ரஜினியிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஓபன் டாக்
அனைத்தையும் பொறுமையாக கேட்ட ரஜினி, இந்த மாதிரியான அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று ஓபனாகவே சசிகலாவிடம் சொல்லிவிட்டாராம்.. ஆனால், லதாதான், சசிகலாவுக்காக ரஜினியிடம் நிறைய முறை பேசியிருக்கிறார்... அதன்பிறகே ரஜினி சசிகலா விவகாரத்துக்கு சம்மதித்ததாகவும், டெல்லிவரை தொடர்பு கொண்டு அவருக்காக பேசியதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன..

அதிரடிகள்
இதில், இன்னொன்றையும் சொல்கிறார்கள், திமுக மீதிருந்த நல்ல அபிப்பிராயம் இப்போது ரஜினிக்கு இல்லையாம்.. திமுக அரசில் அதிருப்திகள் வெடிக்க ஆரம்பித்துள்ளதும், அதிமுகவில் நடந்ததை விட அதிகமாகத்தான் இப்போது நடக்கிறது, அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும் ரஜினிக்கு சிலர் உணர்த்தி உள்ளதாக தெரிகிறது.. எனவே, நாளுக்கு நாள் திமுக அரசு மீது நல்லெண்ணம் ரஜினிக்கு குறைந்து வருகிறதாம்.. இதை உணர்ந்துதான், அரசியல் ஆசையை ரஜினிக்கு மீண்டும் தூண்டியுள்ளாராம் சசிகலா... அப்படியானால் "ரஜினி 2.0" மீண்டும் தமிழக அரசியலில் உருவெடுக்குமா என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது












Click it and Unblock the Notifications