14 வயதிலிருந்து பொது வாழ்வு.. வளர்ச்சி பாதை நாயகன்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து
சென்னை: திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிலையில், கட்சியின் தலைவராக இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணை பொதுச் செயலாளராக முதன்முறையாக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பொதுக்குழு
திமுக பொதுக்குழு கூட்டம் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிலையில் தற்போது தனியார் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், திமுக நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5,000 பேர் பங்கேற்றனர்.

வாழ்த்துகள்
இந்நிலையில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், "இரண்டாவது முறையாக திமுக'வின் தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள துரை முருகன் பொருளாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பிற தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் எமது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ள வாழ்த்துக் குறிப்பில், "திராவிட முன்னேற்ற கழக தலைவராக மீண்டும் தேர்வாகியிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து அனைத்து துறைகளிலும் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்தும், சமூகநீதியில் சிகரம் தொட்ட அரசாகவும், மாநிலத்தை சமூகவிரோத சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் மற்ற மாநில முதல்வர்களை காட்டிலும் விஞ்சி நிற்கிறார் நம் முதல்வர்.

பொதுச் செயலாளர்
கட்சியிலும், ஆட்சியிலும் என்றென்றும் தலைமை பொறுப்பை ஏற்று ஓய்வின்றி மக்களுக்கு சேவையாற்றும் முதல்வர் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ்
அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிவிப்பில், "திமுகவின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். தந்தையைப் போல கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்லவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று கூறியுள்ளார். மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறிய வாழ்த்து அறிவிப்பில், "14 வயதிலிருந்தே மு.க.ஸ்டாலின் தனது பொது வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்த வந்தவர். தற்போது இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications