சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரம்கோர்த்த இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள்.. மத்திய அரசின் "போக்கை" கண்டித்து தொடர் போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் மே 25 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளன.

பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அது போல் அந்தந்த மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!

இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. செஸ் வரியை ரத்து செய்யாமல் மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கலால் வரியை மட்டும் குறைப்பதா? மத்திய அரசுக்கு சொந்தமான செஸ் வரியை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன.

 பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும், ஆனால் குறைப்பதற்கு மட்டும் மாநில அரசு வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள். மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் செயலாளர் கே பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை

அப்போது அவர்கள் மேலும் கூறுகையில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து மிகப் பெரிய கண்டன இயக்கத்தை நடத்த தீர்மானம் செய்துள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் மே 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கண்டன இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.

200 சதவீதம்

200 சதவீதம்

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு சிறிதளவு குறைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 200 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்திவிட்டு 7 சதவீதம் மட்டும் குறைப்பது முழுமையான நிவாரணமாக இல்லை. 2014 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 72, ஒரு லிட்டர் டீசல் ரூ 55 ஆக இருந்தது.

மத்திய அரசு

மத்திய அரசு

எனவே மத்திய அரசு உயர்த்தியுள்ள செஸ் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதே போல் சமையல் எரிவாயு மீது உயர்த்தப்பட்டுள்ள அனைத்து விலை உயர்வையும் திரும்பப் பெற வேண்டும். எரிவாயு விலை உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

English summary
Communists, Marxists, VCK calls for protest against Centre's Economic policy from May 25 to 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X