சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல்லக்கை சுமப்பது அடிமைகளா? தேவதாசி முறை போன்றதா?அரசியல் சாசனத்தை முன்வைத்து வக்கீல்கள் கடும் வாதம்

Google Oneindia Tamil News

சென்னை: தருமபுர ஆதீனம் மடத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி பல்வேறு விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது. ஆதீனத்தை பல்லக்கில் சுமப்பது என்பது அடிமை முறையாகாது என்கிறது ஒரு தரப்பு. ஆனால் ஒழிக்கப்பட்ட தேவதாசி முறைக்கு சமமானது ஆதீனத்தை பல்லக்கில் சுமப்பது என்கிறது எதிர்தரப்பு. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Legal debates over Dharmapuram Adheenams Pattina Pravesam

தருமபுர ஆதீனத்துக்கு ஆதரவாக இராம. அருண் சுவாமிநாதன் (வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை) வெளியிட்ட அறிக்கை:

பல்லக்கை |Palantquine] சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு தருமபுர ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வருவாய் கோட்டாட்சியர் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 என்னவென்றால், "Traffic in human beings and beggar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law". என மேற்படி சட்டப் பிரிவை படிக்கும் போது, 'மனிதர்களை கடத்துவதும், கொத்தடிமை மனிதர்களை பணியில் வைத்தலும் குற்றம் கூறுகிறது. மேற்படி பட்டினப் பிரவேசத்தில் கொத்தடிமைகள் ஈடுபடுகிறார்களா? Forced labour மூலம் ஆதீனகர்த்தரை தூக்கி சென்றால் அது குற்றமாக கொள்ளலாம். சீடர்கள், தம்பிரான்கள், ஆதீன கர்த்தர் அவர்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட மெய்யன்பர்கள் தாமாக முன்வந்து பல்லக்கில் பிரவேசிக்க வைப்பது கொத்தடிமைகள் என்ற பொருளில் வருமா??

International Labour Organization (ILO) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின், 1930 ஆண்டின் கட்டாய தொழிலாளர் மாநாட்டின் படி, Forced Labour என்பதை கீழ்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. "All work or service which is exacted from any person under the threat of a penalty and for which the person has not offered himself or herself voluntarily." இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இல், other similar forms of forced labour என்றே உள்ளது. இந்த வைபவத்தில் forced labour எவரும் இல்லை. இருப்பினும் அதே அரசியலமைப்பு சட்டம் பிரிவு 26(b)-ன் படி to manage Its own affairs in matters of religion; எனும் வகையில் மத சம்மந்தமான தனது தனிப்பட்ட விவகாரங்களை கவனித்து கொள்ள உரிமை அளிப்பட்டுள்ளதால், சைவ சமயத்தை சார்ந்த மட நிகழ்வில் கோட்டாட்சியர் தலையிட எவ்வித அதிகாரமுமில்லை.

ஒருவேளை இந்து மதத்தை வெளிப்படையாக வெறுக்கும் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தாலும், பிரச்சனை செய்ய முன் வந்தாலும் அவர்கள் மீது தான் கோட்டாட்சியர் CRPC படி நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு வழக்கத்தை தடை செய்ய வருவாய் துறைக்கோ, காவல் துறைக்கோ எவ்வித அதிகாரமுமில்லை.

Legal debates over Dharmapuram Adheenams Pattina Pravesam

இவ்வாறு இராம. அருண் சுவாமிநாதன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை.அருண் வெளியிட்டுள்ள பதிவு:

அரசியல் சட்டப்பிரிவு 23 பல அடிமை முறைகளுக்கு, தீண்டாமை கொடுமைகளுக்கு தடை விதித்து இருக்கிறது. குறிப்பாக கட்டாயமாக வேலைக்கு உட்படுத்துதல், கொத்தடிமை முறையை ஆகியவற்றை தடை செய்கிறது.

Practices Prohibited by Article 23 of Constitution of India .

(1) Traffic in human beings and begar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law.

(2) Nothing in this article shall prevent the State from imposing compulsory service for public purposes. In imposing such service the State shall not make any discrimination on the ground of race, religion, caste or class.

If the practice of Human Palanquin claimed to have is referred to as religious practice protected by Article 26 of the constitution of India by any measurement the practice of human carrying Palanquin is not lesser to the devadasi System and human sacrifice, Child marriage and etc.

As such whether the mutts can claim they can even practice devadasi system and human sacrifice by referring to the protection guaranteed to the mutts under the constitution of India.

The protection guaranteed to the mutts in the Constitution of India as to the practice of worship and administration of mutts alone.

ஆகவே அரசியல் சட்டப்பிரிவு 26 இன் படி மனிதனை மனிதனே சுமப்பது என்பது தேவதாசி முறைக்கும் , குழந்தை திருமணத்திற்கும், உடன்கட்டை ஏறுதலைப் போன்றே ஒரு அடிமை முறைத்தானே ஒழிய வேறொன்றும் இல்லை.

அரசியல் சட்ட உரிமை என்பதால் தேவதாசி முறையை தற்போதும் கடைபிடிப்போம் என ஆதினங்கள் கோரிக்கை விடுப்பார்களா??

அரசியல் சட்டப்பிரிவு 26 வழங்கி இருக்கும் உரிமை என்பது இறை வழிபாட்டுக்கும் , மடத்தை நிர்வகிப்பதற்கு மட்டுமேயன்றி, அடிமை முறையை பின்பற்றுவதற்கு அல்ல. குறிப்பாக பல்லக்கு தூக்குவதற்காகவே வைத்திருப்பவர்கள் என்பது எதைக்குறிக்கிறது என்றால் தேவதாசி முறையை தான் குறிக்கிறது.

Recommended Video

    Madurai Aadheenam-க்கு Police Protection கொடுங்க-வக்கீல்கள் | Oneindia Tamil

    ஏனெனில் தேவதாசிகளும் விருப்பப்படியே செயல்பட்டு வந்தார்கள் அதுவும் வழக்கம் கடவுளுக்கு செய்யும் கடமை என்று சொல்லி வந்தார்கள்.
    கோட்டாச்சியருக்கு தடை கொடுக்க உரிமை இல்லை என்கிறார் - மனிதனை மனிதன் விரும்பிக்கூட தூக்கி சுமந்தால் மனித உரிமை மீறல் ஆகவே கோட்டாச்சியர் தலையிடலாம் அவர் ஒரு Executive Magistrate ஆகவே மனித உரிமை மீறல் நடக்கும் போது Suo moto அடிப்படையில் தலையிடலாம்.
    மடாதிபதிகள் மடத்திற்கு தான் அதிபதிகளே தவிர உலகத்திற்கு அல்ல. இவ்வாறு துரை. அருண் கூறியுள்ளார்.

    English summary
    Here is Legal debates over the Dharmapuram Adheenam's Pattina Pravesam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X