இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்..முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ் சமூகம் இலக்கிய முதிர்ச்சியையும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைமிகு சமூகம் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் 2 நாட்கள் நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் இலக்கிய திருவிழா முதன்முதலாக தொடங்கியது.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ், ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் விருது பெற்ற எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
"தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வரும் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி நேருஜி அரங்கம், நூற்றாண்டு மண்டபம், வ.உ.சி அரங்கம், பிபிஎல் திருமண மண்டபம், பாளையங்கோட்டை மேற்கு கோட்டை வாசல் ஆகிய ஐந்து அரங்குகளில் திருவிழா நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இலக்கிய திருவிழாவில் ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்டுப்புற கலை பொருட்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இலக்கிய திருவிழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மண்டல அளவில் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து இத்திருவிழா நடைபெறுகிறது. நெல்லையில் கானி மக்கள் மத்தியில் இருக்க கூடிய மருத்துவம் சார்ந்த விஷயங்களை டிஜிட்டல் மையம் ஆக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார்.
பொருநை இலக்கியத்திருவிழாவை இன்று தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் சமூகம் இலக்கிய முதிர்ச்சியையும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைமிகு சமூகம் என்று கூறினார். பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை ஆகிய 5 இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது. இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இப்படியும் ஒரு அதிசயமா? 3 குழந்தைக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.. நெல்லையை நெகிழ வைத்த குடும்பம்












Click it and Unblock the Notifications