256 ஆண்டு காலம் வாழ்ந்த மனிதர்.. உலகின் மிக நீண்ட ஆயுளுக்கான 'பரம' ரகசியம் இதுதானாம்!
சென்னை: சீனாவை சேர்ந்த லீ சிங் யுன் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்த மனிதராக கருதப்படுகிறார். சுமார் 250 ஆண்டு காலம் அவர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன தெரியுமா?
பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளை வாழ விரும்பினாலும், பலரால் அதை அடைய முடியாது. அது எளிதான விஷயமும் அல்ல. சராசரி மனித ஆயுட்காலம் சுமார் 70 முதல் 80 ஆண்டுகள் வரை இருக்கும் ஒரு காலத்தில், சுமார் 250 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு சீன மனிதனின் கதை சுவாரஸ்யமானது மட்டுமல்ல, நம்ப முடியாதது.

சீன மூலிகை மருத்துவரும், தற்காப்புக் கலைஞருமான லி சிங்-யுன் தான் உலகில் இதுவரை வாழ்ந்தவர்களில் அதிக வயதானவர் என்று பலராலும் நம்பப்படுகிறது. லி 1736 இல் பிறந்தவர் என்றும் அவர் 1933 இல் இறக்கும் போது அவருக்கு 197 வயதாக இருந்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் 1677 இல் பிறந்திருக்கலாம் என்றும் ஒரு தகவல் உள்ளது. அதாவது, அவர் 256 வயதில் காலமாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆனால் லீ சிங்-யுன் மற்றவர்களை விட மிக அதிக ஆண்டுகள் வாழ்வதற்கு வித்தியாசமாக அப்படி என்ன செய்தார்? எது அவருக்கு 250 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ உதவியது? உலகின் மிக நீண்ட காலம் வாழ்ந்த சீன மனிதரான அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை மற்றும் அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
மிக நீண்ட காலம் வாழ்ந்த சீன மனிதரின் நீண்ட ஆயுளுக்கான ரகசியங்கள்
1930 ஆம் ஆண்டு வாக்கில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, லீ சிங்-யுன் தனது நம்பமுடியாத நீண்ட ஆயுளுக்கு எளிமையான ஒரு விஷயம் தான் காரணம் என்று ஒரு சீன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அமைதி. ஆழ் மன அமைதியைக் கைக்கொண்டால் யார் வேண்டுமானாலும் 100 வயதுக்கு மேல் வாழ முடியும் என்று லீ அடிக்கடி கூறுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன அழுத்தம் உடலின் இயற்கையான சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடல் அதிக அளவு கார்டிசோலை வெளியிடுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் காலப்போக்கில் இதய நோய்க்கு இட்டுச் செல்லும். மன அழுத்தம் செரிமானம், தூக்கம் மற்றும் மனத் தெளிவையும் பாதிக்கிறது, இதனால் பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது.
மன அழுத்தம் இருந்தால்
நீண்டகாலமாக தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பது வயதானதை வேகப்படுத்துவதோடு, நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும், இதனால் ஒட்டுமொத்த நல்வாழ்வையே சிதைக்கும். மனதை பிரஷர் இல்லாமல் நிர்வகிப்பது நீண்ட காலம் நலமுடன் வாழ அவசியமாகிறது. எனவே, மன அழுத்தத்தைத் தடுத்து நிறுத்தி அமைதியான வாழ்க்கை வாழ்வது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதில் மிக முக்கியமானது.
மன அமைதி, சிறந்த தூக்கம், தெளிவான சிந்தனை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது. இவை அனைத்தும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம். தியான பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் மன அமைதியை கைக்கொள்ளலாம்.
மூலிகைகள்
லீயின் நீண்ட ஆயுளுக்கு அவர் வாழ்நாள் முழுவதும் உட்கொண்ட சில மூலிகைகளும் காரணம் என்று கூறப்படுகிறது. லீ திபெத், அன்னம் மற்றும் சியாம் போன்ற பகுதிகளுக்குச் சென்று ஆராய்ந்து, பல்வேறு மருத்துவ தாவரங்களை சேகரித்தார். பல பாரம்பரிய சீன மூலிகைகளை அவர் விற்றார். அவர் அவற்றை விற்க மட்டும் செய்ய்யாமல் இந்த மூலிகைகள் மற்றும் அரிசி ஒயின் ஆகியவற்றை கொண்ட ஒரு எளிய உணவு முறையை பின்பற்றி வாழ்ந்துள்ளார். இது அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பங்களித்ததாக கூறப்படுகிறது.
லீ சொன்ன அட்வைஸ்
லி சிங்-யுன்னின் மாணவர்களில் ஒருவர், நீண்ட ஆயுளுக்கான லீயின் அறிவுரை பற்றிப் பகிர்ந்து கொண்டுள்ளார். "அமைதியான இதயத்தை வைத்திருங்கள், ஆமை போல உட்காருங்கள். புறாவைப் போல விறுவிறுப்பாக நடங்கள். நாயைப் போல தூங்குங்கள்." இதுதான் அவரது அட்வைஸாம். நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான அற்புதச் சாவியாக லீ கருதியது இவற்றைத்தானாம்.
லீ சிங் யுன்னின் வயது பற்றிய இந்தத் தகவல்கள் வெறும் கட்டுக்கதைகள் அல்ல. 1930களில், ஒரு சீனப் பேராசிரியர் லீயின் 150வது மற்றும் 200வது பிறந்தநாளைக் கொண்டாடும் பதிவுகளையும் கண்டுபிடித்தார், அவை அவரது நம்பமுடியாத நீண்ட ஆயுளுக்கு சாட்சி. லீ 1933 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது அவருக்கு 11 தலைமுறைகளில் 180 உயிருள்ள சந்ததியினர் இருந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் 14 முதல் 23 முறை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
உண்மையோ பொய்யோ, லி சிங்-யுன் ஆரோக்கியம், எளிமை மற்றும் அமைதியான வாழ்க்கையின் உதாரண அடையாளமாகத் தொடர்கிறார்.
-
சீனாவுக்காக ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்கிறேன்.. டிரம்ப் சொன்ன மேட்டர்! -
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி! -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
ஈரான் - அமெரிக்கா மோதல்.. சீனுக்குள் வரும் சீனா! 4 அம்ச திட்டம்.. ஜி ஜின்பிங் போடும் பலே பிளான்? -
டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்! -
ஸ்கெட்ச் ஈரானுக்கு இல்ல, சீனாவுக்கு.. அமெரிக்காவின் Blockade-க்கு பின்னால் தந்திரமான திட்டம்.. முறியடிக்கும் ஜி ஜின்பிங் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications