விஜய் ரசிகருக்கு நெத்தியடி பதில்.. கரூர் நெரிசலில் நீங்க சாகலையா? லிவிங்ஸ்டன் மகள் சுளீர்
சென்னை: விஜய் மீதும் விஜய் ரசிகர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் நடிகர் லிவிங்ஸ்டன் மகளிடம் வாய் பேசி, வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து விஜய் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், விஜய்க்கு சப்போர்ட் செய்வதாக நினைத்துக்கொண்டு, கற்பனை கதைகளை உண்மை என்று பேசி வரும் விஜய் ரசிகர்களும் இந்த விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை.

இப்படியான கேங்கை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் நடிகர் லிவிங்ஸ்டன் மகளிடம் வாய் பேசி செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார். மூத்த திரைக்கலைஞர்களில் ஒருவர்தான் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன், சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது தந்தை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பலரது கவனத்தையும் பெற்றிருந்தது. ஆனால் அந்த போஸ்டுக்கு கீழ், விஜய் ரசிகர்கள் ஒருவர் கமென்ட் செய்திருந்தார்.
அதாவது "உங்க அப்பா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். திரைக்கலைஞர்கள் சிலரின் மறைவு சமீப காலமாக செய்தியாகி வரும் நிலையில், இந்த கேள்வி நியாயமானதாக தெரியலாம். ஆனால், இது முழுக்க முழுக்க நக்கலாக எழுப்பப்பட்ட கேள்வி போன்று தெரிகிறது. எனவே, இதற்கு ஜோவிடா லிவிங்ஸ்டனும் முரட்டு பதிலாக அளித்துள்ளார். அதாவது, "ஓ.. ஹாய் TVK. நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர் ஏன் இப்படி நக்கலாக கேள்வி எழுப்ப வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications