சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 அசைன்மென்ட்ஸ்.. முதல்வர் ஸ்டாலின் காதுக்கு போன புகார்.. மா. செக்கள், அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக நிர்வாகிகள் பலர் ஏற்கனவே களத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினோ ஆன்லைன் பிரச்சாரம் மட்டும் செய்து வருகிறார்.

ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் மொத்தமாக அதிமுகவினர் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி கடந்த 4 நாட்களாக கொங்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மாநில உரிமைகளை காக்க டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் மாநில உரிமைகளை காக்க டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின்

அதிமுக லீடிங்

அதிமுக லீடிங்

இந்த நிலையில்தான் அதிமுக சில மாவட்டங்களில் லீடிங் பெற தொடங்கி உள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறதாம். தொடக்கத்தில் அதிமுகவிற்கு ஆதரவு கம்மியாக இருந்தது. ஆனால் சில கொங்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் அதிமுக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து உள்ளது. வீடு வீடாக வாக்கு கேட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இப்படியே போனால் சில இடங்களில் அதிமுக திமுகவை முந்தி சர்ப்ரைஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

முதல்வருக்கு போன செய்தி

முதல்வருக்கு போன செய்தி

அதுமட்டுமின்றி மாவட்ட செயலாளர்கள் பலரும் நன்றாக வேலை பார்க்கிறார்கள் பலர் வேட்பாளர்களுடன் நெருக்கமாக இருந்து தேர்தல் பணிகளை செய்கிறார்கள். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் களத்திற்கே செல்லவில்லை. நிர்வாகிகளை, வேட்பாளர்களை பிரச்சாரம் செய்யவிட்டுவிட்டு, மாவட்ட செயலாளர்கள் கட்சி அலுவலகத்தில் இருக்கிறார்கள் என்ற புகார் முதல்வர் தரப்பிற்கு சென்று உள்ளதால். அதாவது ஒரு சில மா. செக்கள் பற்றி மட்டும் புகார் சென்றுள்ளதாம்.

 அமைச்சர்கள் சிலரும் பிஸி

அமைச்சர்கள் சிலரும் பிஸி

மேலும் ஒரு சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் பணிகளை செய்வதில் கவனமாக இருக்கிறார்கள். தேர்தல் பணிகளை செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த போது அமைச்சர் படையே களத்தில் இருந்தது. ஆனால் இப்போது திமுக அமைச்சர்களை களத்தில் பார்க்க முடியவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் காதுக்கு தகவல் சென்றுள்ளதாம்.இதையடுத்தே சில அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாராம்.

அடுத்த 3 நாட்கள் தீவிரம்

அடுத்த 3 நாட்கள் தீவிரம்

அடுத்த 3 நாட்கள் (இன்றையும் சேர்த்து) மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள். ஒரு வீடு வீடாமல் சென்று வாக்கு கேளுங்கள். ஆளும் கட்சியாக இருந்து கொண்டு தோல்வி அடைந்தால் நன்றாக இருக்காது. எல்லா நகர, மாநகர பதவிகளையும் நாம்தான் கைப்பற்ற வேண்டும். சில மா. செக்கள் பற்றி புகார் வந்துள்ளது. அவர்களும் சுதாரித்துக்கொண்டு இப்போதே வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தலுக்கு பின் என்னுடைய நடவடிக்கைக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறாராம்.

2 உத்தரவுகள்

2 உத்தரவுகள்

மொத்தம் 2 உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் இதில் பிறப்பித்ததாக கூறப்படுகிறது. அதன்படி சட்டசபை தேர்தலில் திமுக சரியாக வெற்றிபெறாத கொங்கு மாவட்டங்கள், சில வடமாவட்டங்களில் உள்ள மா. செக்கள் கண்டிப்பாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்று கூறி உள்ளாராம். அதேபோல் அமைச்சர்களுக்கு சொந்தமான மாவட்டங்களில் கண்டிப்பாக கிளீன் வெற்றியை பெற வேண்டும். எந்த காரணமும் சொல்ல கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறாராம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து திமுகவில் கட்சி ரீதியான, அமைச்சர் ரீதியான பதவி மாற்றங்கள் வரும் என்றும் கூறுகிறார்கள். அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் சரியாக பர்பார்ம் செய்யாத சில அமைச்சர்களிடம் இருந்து முக்கிய பொறுப்புகள் பறிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த விரிவாக்கத்தில்தான் உதயநிதி உள்ளிட்ட சிலருக்கு பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் சில மாசெக்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
Local Body Election: CM M K Stalin order to Ministers and District secretaries on campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X