சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் 4: சென்னை உட்பட தமிழகத்தில் 5 நகரங்களுக்கு தளர்வு இல்லை.. வெளியான தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: மே 18ம் தேதிக்கு பிறகு, நான்காம் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுனின் போது பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்றும், ஆனால், தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர் ஆகிய 5 நகரங்களுக்கு விலக்கு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    National Lockdown 4.0: அதிக தளர்வுகள்... லாக்டவுன் 4.0 குறித்து வெளியான தகவல்கள்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி முதல் மே 17 வரை மூன்றாம் கட்ட லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மே 17ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையுடன், 3வது கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது என்றபோதிலும், மீண்டும் அது நீட்டிக்கப்பட உள்ளது.

    Cyclone Amphan: வங்கக் கடலில் உருவானது புயல்.. சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் 'ஆம்பன்'Cyclone Amphan: வங்கக் கடலில் உருவானது புயல்.. சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் 'ஆம்பன்'

    மோடி உரை

    மோடி உரை

    சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடியும் இதை உறுதி செய்தார். இந்த நிலையில்தான்,நாளை ஊரடங்கு உத்தரவு 4.0 குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. இன்று இரவுக்குள், இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை.

    நகரப் பகுதிகள்

    நகரப் பகுதிகள்

    இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 80 சதவீதத்திற்கும் மேல் பதிவாகி உள்ளது குறிப்பிட்ட நகர்ப்பகுதிகளில்தான். அப்படியான, 30 மாநகராட்சி, நகராட்சிகளில் 4ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு முன்பைவிட கூடுதல் கெடுபிடிகள் இருக்க கூடும்.

    சென்னை நகரம்

    சென்னை நகரம்

    இதன்படி, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 நகரங்களுக்கு மட்டும், லாக்டவுன் ஊரடங்கில் விலக்கு இருக்காது என தெரியவருகிறது. சென்னையில், தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சுமார் 70 சதவீதம் பதிவாகியுள்ளது. எனவே, சென்னைக்கு விலக்கு கிடையாது. மற்ற நகரங்கள் கோயம்பேடு கிளஸ்டரோடு சம்மந்தப்பட்டது.

    பிற நகரங்கள்

    பிற நகரங்கள்

    அகமதாபாத், தானே, டெல்லி, இந்தூர், புனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர், நாசிக், ஜோத்பூர், ஆக்ரா, அவுரங்காபாத், ஹைதராபாத், சூரத், வதோதரா, உதய்பூர், பால்கர், பெர்ஹாம்பூர், போபால், சோலாப்பூர் மற்றும் மீரட் உள்ளிட்ட நகரங்களுக்கு, இந்த ஊரடங்கில் விலக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    The Ministry of Home Affairs (MHA) is likely to release on Sunday the guidelines for the fourth phase of lockdown, termed as Lockdown 4.0 by Prime Minister Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X