கணவருடன் சண்டை.. பெரும் மன உளைச்சல்.. சேலையில் தூக்கு போட்டு உயிரை விட்ட கர்ப்பிணி சரண்யா
சென்னையில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: நிறைமாத கர்ப்பிணி சரண்யா கணவருடன் சண்டை போட்டுவிட்டார்.. வீட்டுக்கு வெளியே தள்ளுவண்டியில் காய்கறிகளை கணவர் எடுத்து வைத்து கொண்டிருந்த நேரம், மன உளைச்சலில் இருந்த சரண்யா சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் செல்வராஜ்.. 25 வயதாகிறது.. இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா.. 20 வயதாகிறது.. 6 வருடமாக காதலித்து கல்யாணம் செய்தவர்கள்.. 2 வருஷத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இப்போது சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஊரடங்கு என்பதால் ஜெகனுக்கு காய்கறி வியாபாரம் செய்ய முடியவில்லை.. அதனால் போதிய வருமானமும் கிடைக்கவில்லை என தெரிகிறது.. இதனால் தம்பதிக்குள் தகராறும் வெடித்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவும் பணம் இல்லாததால் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.. அதனால் ஜெகன் விடிந்ததும் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யலாம் என முடிவெடுத்தார்.. அதற்காக வீட்டின் வெளியே வந்து, காலையில் வியாபாரத்துக்கு போவதற்காக காய்கறிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.
பிறகு வீட்டுக்குள் சென்றபோது, சரண்யா தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு கதறினார்.. சேலையை ஃபேனில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தூக்கில் தொங்கிய சரண்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சரண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள், சொல்லிவிட்டனர். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சரண்யாவுக்கு கல்யாணமாகி 2 வருடங்களே ஆவதால் இதுபற்றி சென்னை ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது. நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் லாக்டவுன் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.. பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தற்கொலை சம்பவமும் பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications