கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள், இதர மாவட்டங்கள்.. எவை எவற்றுக்கு அனுமதி? முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் ஜூன் 7-ந் தேதி வரை முதல் முறையாக நீட்டிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீடிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய லாக்டவுன் தளர்வுகளுடன் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7-ந் தேதி முதல் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். பழங்கள், பூகடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் இயங் அன்னுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்.
நோய் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளவை விவரம்:
- மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்
- காய்கறி, பழம்,பூ விற்பனை நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
- மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தைகளுக்கு அனுமதி
- மொத்த விற்பனைக்காக மட்டும் இறைச்சி கூடங்களுக்கு அனுமதி
- அரசு அலுவலகங்களில் 30% பணியாளர்கள் செயல்பட அனுமதி
- சார்பதிவாளர் அலுவலகங்களில் 50% டோக்கன்கள் மட்டும் வழங்கி பதிவுகள் மேற்கொள்ல் வேண்டும்
- தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
11 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஜூ 14 வரை அனுமதி விவரம்
- மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்
- காய்கறி, பழம்,பூ விற்பனை நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
- மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தைகளுக்கு அனுமதி
- மொத்த விற்பனைக்காக மட்டும் இறைச்சி கூடங்களுக்கு அனுமதி
- அரசு அலுவலகங்களில் 30% பணியாளர்கள் செயல்பட அனுமதி
- சார்பதிவாளர் அலுவலகங்களில் 50% டோக்கன்கள் மட்டும் வழங்கி பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்
- வீட்டு பராமரிப்பு பணிகளுக்கு இ ரெஜிஸ்டிரேசன் தேவை
- எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கார்பென்டர்கள், மோட்டார் மெக்கானிக்களுக்கும் இ ரெஜிஸ்டிரேசன் தேவை
- ஹார்ட்வேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்
- இருசக்கர வாகனம், சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்
- ஸ்டேசனரி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்
- வாடகை வாகனங்கள், ஆட்டோக்களில் செல்ல இ பதிவு கட்டாயம்
தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்:












Click it and Unblock the Notifications