2026ல் புது என்ட்ரி.. முஸ்லிம்களுக்கு திமுக வாய்ப்பு தந்திருக்க வேண்டும்! தமிமுன் அன்சாரி வருத்தம்
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு தந்திருக்க வேண்டும். 2019 முதல் வரும் லோக்சபா தேர்தல் என மனிதநேய ஜனநாயக கட்சி 3 முறை திமுகவை ஆதரித்து வருகிறது. 2026ல் நிச்சயம் மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தலில் களமாடும் என அதன் தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியை முன்னாள் எம்எல்ஏவான தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரித்துள்ளது. அந்த கட்சிக்கு திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படவில்லை.
இருப்பினும் கூட மனிதநேய ஜனநாயக கட்சி திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் தான் ‛‛ஒன் இந்தியாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்களின் விபரம் வருமாறு:

கேள்வி: 2024 லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துள்ளீர்கள்? அதற்கான காரணம் என்ன?
தமிமுன் அன்சாரி பதில்: இந்த தேர்தலை வெறும் தேர்தல் களமாக பார்க்கவில்லை. பாசிசத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறோம். அந்த அடிப்படையில் நாட்டின் பன்முகத்தன்மை, ஜனநாயகம், சட்ட மாண்புகள், சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜகவை வலிமையாக எதிர்க்ககூடிய கட்சியின் கூட்டணிக்கு வாக்கு சிதறாமல் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படையில் முடிவு எடுத்து ‛இந்தியா ' கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அதேபோல் ‛இந்தியா' கூட்டணியில் தமிழகத்தில் தலைமையேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்றார்.
கேள்வி: அரசியலில் அடிப்படை அதிகாரத்துக்கு செல்வது தான். நீங்கள் 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், இப்போது என எத்தனை முறை தொகுதிகள் இன்றி திமுகவுக்கு ஆதரவு கொடுக்க முடியும்?
தமிமுன் அன்சாரி பதில்: எங்களுக்கு சங்கடமாக தான் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நிர்வாக கட்டமைப்புகளை வைத்து கொண்டு தேர்தலில் களமாடாமல் ஆதரவு மட்டும் கொடுப்பது என்பது அரசியல் ரீதியாக எத்தகைய எதிர்காலத்தை தரும் என்ற கேள்வியை நாங்களும் உள்வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம்முடைய நாட்டில் நிலவி வரும் போராபத்தை உற்று நோக்க வேண்டி உள்ளது. கூட்டாச்சி தத்துவம் இல்லாத நிலையை நோக்கி நாடு செல்கிறது. இன்னொரு முறை நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதோடு மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் முதல்வரின் அதிகாரம் மேயர் அளவுக்கு சுருக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் ஆளுநர் அதிகாரம் என்பது இன்னும் கூடுதலாக்கப்பட வாய்ப்புள்ளது. எம்எல்ஏக்களின் அதிகாரம் வார்டு உறுப்பினர் என்ற அளவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் தான் திமுகவை ஆதரிக்கிறோம். ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் உறுதியாக மனிதநேய ஜனநாயக கட்சி நிச்சயம் களமாடும் என்றார்.
கேள்வி: உங்களுக்கு அதிமுக ஒரு சாய்ஸாக இருந்ததா?
தமிமுன் அன்சாரி: எங்களுக்கு அப்படியான ஆப்ஷன் வந்தது. ஆனால் நாம் அரசியல் கட்சி நடத்துகிறோம். அனாதை இல்லம் நடத்தவில்லை. பல்வேறு தலைவர்கள் பேசினார்கள். அதோடு ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் இருந்தது. அரசியலில் அனைவரும் அனைவரிடமும் பேசுவார்கள். ஆனால் இது நாடாளுமன்ற தேர்தல். பாஜகவா, ‛இந்தியா' கூட்டணியா? என்பதை வைத்து பார்த்து புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டும். அந்த வகையில் தான் எங்களுக்கு ஒரு தொகுதி கிடைப்பதாக இருந்தாலும் கூட தேசத்தில் நன்மையை கருதி நாட்டின் பன்முக கலாசாரத்தை கருதி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்தோம். தொகுதி இல்லாவிட்டாலும் கூட 3வது முறையாக தியாகம் செய்ய முடிவு செய்தோம். ஆனால் நான்காவது முறையாக நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம். எப்போதும் தியாகம் செய்தால் மக்கள் எங்களை சன்னியாசியாக நினைத்து விடுவார்கள்.
கேள்வி: எஸ்டிபிஐ தரப்பில் திமுகவை விட அதிமுக தான் இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகம் கொடுத்த கட்சி. இதனால் அதிமுகவின் பக்கம் இருக்கிறோம். திமுக இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக தான் பார்க்கிறது. ஒரு டேட்டா எடுத்து பார்த்தாம் என்றால் இதுவரை முஸ்லிம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது தவிர்த்து மக்களவைக்கு ஒரு முஸ்லிம் கூட போனது கிடையாது. இன்று பாஜக மீது அதே குற்றச்சாட்டை நாம் வைக்கும்போதும் திமுக மீதும் வைக்கலாம் தானே?
தமிமுன் அன்சாரி பதில்: இந்த விஷயத்தில் திமுக மீது மாற்றுக்கருத்து இருக்கலாம். 21 தொகுதிகளில் திமுக போட்டியிட்டும் ஏன் ஒரு முஸ்லிம்களுக்கு கூட வாய்ப்பு அளிக்கவில்லையே? என்ற கேள்வி எழலாம். ஆனால் இதனை எதிர்காலத்தில் திமுக சரிசெய்யும். ஏனென்றால் தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பெரிய கட்சியான திமுகவுக்கு தான் வாக்களித்தனர். வாக்களித்து கொண்டே வருகின்றனர். இதனால் உரிமையில் திமுகவிடம் சீட் கேட்கின்றனர். மேலும் இந்த கோரிக்கை திமுக பரிசீலனை செய்ய வாய்ப்பு தந்திருக்க வேண்டும். அதேவேளையில் திமுக ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயம் இல்லை. இரண்டு கட்சிகளும் தங்களின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு முடிந்ததை செய்துள்ளனர். இதனால் அவர்கள் எதையுமே செய்யவில்லை என கூறிவிட முடியாது. இதனை நிதானமாக அணுக வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications