கருத்துக் கணிப்புகளை நம்பலாமா? ஏன் இவ்வளவு தவறுகள்? இது கணிப்பா? வெறும் திணிப்பா?
சென்னை: இந்த முறை வெளியாகி உள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஏகப்பட்ட தவறான டேட்டாக்கள் இடம்பெற்றுள்ளன. ஏன் இந்தக் குழப்பங்கள்? குளறுபடிகள்?
நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது. எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

முகவரியே இல்லாத நிறுவனங்கள் எல்லாம் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. யாரை நம்புவது? யார் சொல்வது உண்மை? இப்படி பொதுமக்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.
பல கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவைவிட அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கூறியுள்ளன. சில கணிப்புகள் ஒரு கட்சி போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையைவிட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மனசாட்சியே இல்லாமல் கணிப்பை வெளியிட்டுள்ளன.
உண்மையில் இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்பலாமா? அல்லது போலியாகச் சொல்லப்படும் வெறும் கணிப்புகளா இவை? இதைப் பற்றி பத்திரிகையாளர் கார்த்திகேயன் சில சந்தேகங்களைக் கிளப்பி உள்ளார்.
மேலும் அதன் நம்பகத்தன்மை பற்றிய உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். இது பற்றி கார்த்திகேயன் பேசுகையில், “இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நம்பகத்தன்மையாக இல்லை. அதன்மீது பல சந்தேகங்கள் உள்ளன.
சொல்லப் போனால், விளையாட்டுத்தனமான கருத்துக்கணிப்புகளாக இவை உள்ளன. ஒரு கருத்துக் கணிப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலிருந்து 15 தொகுதிகள் வரை வெல்லும் என்று கூறபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மொத்தம் 9 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. மீதி தொகுதிகள் எங்கே இருந்து காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும்? இது புரியாத புதிராக இருக்கின்றது? இந்த எண்ணிக்கை எங்கிருந்து அவர்கள் பெறுவார்கள்?

அதேபோல் பீகாரில் லோக் ஜன்சக்தி கட்சிக்கு பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு 4 முதல் 6 தொகுதிகள் கிடைக்கும் என்று ஒரு புகழ்வாய்ந்த ஊடகம் கூறியுள்ளது. இந்தத் தேர்தலில் இந்தக் கட்சி 5 தொகுதிகளில்தான் போட்டியே போட்டது? எப்படி 6 தொகுதிகள் கிடைக்கும்?
ஹரியானாவில் உள்ள மக்களவைத் தொகுதிகளே மொத்தம் 10தான். அங்கே பாஜகவுக்கு 16 முதல் 19 தொகுதிகள் கிடைக்கும் என ஒரு ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இது டைபிங் மிஸ்டேக் என்றால் உடனடியாக அதைத் திருத்தி செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்?
ஆனால், அந்த ஊடகம் நாங்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்று நிலவரத்தைக் கண்டறிந்து, மக்களைச் சந்தித்துப் பேசிய பிறகுதான் இதை வெளியிட்டுள்ளோம் என்று சொல்லி இருக்கிறது.
வெறும் 10 தொகுதிகள் மட்டுமே உள்ள மாநிலத்தில், ஒரு கட்சி 19 தொகுதிகளை வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு சொல்லப்பட்டால், அதில் என்ன நம்பகத்தன்மை இருக்க முடியும்?
மொத்தம் 11 நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன. அதில் 10 பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லி இருக்கின்றன. ஆகவே மோடி பிரதமராவது உறுதி என்கிறார்கள்.
கடந்த முறை மேற்குவங்கத்தில் இப்படித்தான் கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. 7 நிறுவனங்கள் பாஜக அங்கே ஆட்சியைப் பிடிக்கிறது என்று தெரிவித்தன. அதுவும் அதிக பெரும்பான்மையுடன் பாஜக வரும் என்று Exit poll சர்வே கூறின.
ஆனால், என்ன நடந்தது? கடைசியில் மம்தா பானர்ஜி 214 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை அமைத்தார். இதே போல அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்டார். அப்போது அங்கே பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றார்கள். அதற்கு நேர்மாறாக கெஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்றார். அதுவும் 70க்கு 67 சீட்டுகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
பீகாரில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கடந்த முறை சொன்னார்கள். ஆனால் லல்லுபிரசாத் யாதவ் கட்சியும் நிதிஷ்குமாரும் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக ஆட்சி அமைக்கும் என்றே கூறின. காங்கிரஸ் 80 சீட்டுகளை வெல்லும் என்றன. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றது. இறுதியில் அங்கேயும் என்ன நடந்தது ? காங்கிரஸ் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆகவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது உறுதியான முடிவு அல்ல. அதைக் கடந்தகாலம் நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே நாளை வெளிவரப் போகின்ற தேர்தல் முடிவுகள்தான் உறுதியானவை.
அந்த முடிவில் எதுவும் நடக்கலாம். பாஜக வரலாம். இந்தியா கூட்டணி வரலாம். அப்படி இல்லை என்றால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூடப் போகலாம்” என்கிறார்
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications