தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் போட்டியிடும் திமுக, கூட்டணி வேட்பாளர்கள் யார்? முழு விவரம்!
சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது தெரியுமா?
மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகள் இன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் திமுக எந்தெந்த தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. இவற்றில் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதியும் கொடுக்கப்படவில்லை. ஆயினும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம் என கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் கட்சி வாரியாக தொகுதிகள்:
திமுக- 21
காங்கிரஸ்- 10
விசிக- 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2
மதிமுக-1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1
மக்கள் நீதி மய்யம்- 1 மாநிலங்களவை சீட்
திமுக கூட்டணியில் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள், வேட்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
ராமநாதபுரம்- நவாஸ் கனி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
நாமக்கல் - மாதேஸ்வரன்
கம்யூனிஸ்ட் கட்சி
நாகை- வை.செல்வராஜ்
திருப்பூர்- சுப்பராயன்
மார்க்சிஸ்ட் கட்சி
மதுரை- வெங்கடேசன்
திண்டுக்கல்- சச்சிதானந்தம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
சிதம்பரம்- தொல் திருமாவளவன்
விழுப்புரம்- ரவிக்குமார்
மதிமுக
திருச்சி- துரை. வைகோ
காங்கிரஸ்
திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்
கிருஷ்ணகிரி- கே.கோபிநாத்
சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்
விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
கரூர்- ஜோதிமணி
கடலூர்- டாக்டர் விஷ்ணு பிரசாத்
நெல்லை- ராபர்ட் புரூஸ்
மயிலாடுதுறை- ஆர்.சுதா
கன்னியாகுமரி- விஜய் வசந்த்
புதுவை- வைத்திலிங்கம்
திமுக
சேலம்- டி.எம்.செல்வகணபதி
தருமபுரி- வழக்கறிஞர் அ. மணி
கோவை- கணபதி பி.ராஜ்குமார்
பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
நீலகிரி- ஆ.ராசா
ஈரோடு - கே.இ.பிரகாஷ்
பெரம்பலூர்- அருண் நேரு
தஞ்சை - முரசொலி
தென்காசி- ராணி
தூத்துக்குடி - கனிமொழி
வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி
மத்திய சென்னை- தயாநிதி மாறன்
தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- க.செல்வம்
வேலூர் - கதிர் ஆனந்த்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
கள்ளக்குறிச்சி- மலையரசன்
ஆரணி- தரணி வேந்தன்
தேனி- தங்கத் தமிழ் செல்வன்












Click it and Unblock the Notifications