பாஜகவின் 400 சீட் கனவு சிதறு தேங்காயாகி,புஸ்வாணமாகி, பொய்யாய், பழங்கதையாய்..கி.வீரமணி கடும் அட்டாக்!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவின் 400 சீட் கனவு என்பது சிதறு தேங்காயாகி, புஸ்வாணமாகிவிட்டது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி கூறியிருப்பதாவது: 2024 ஜூன் ஒன்றாம் தேதி, நம் நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தலின் 7 ஆம் கட்டத் தேர்தல் (ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, சுமார் 40 நாள்களுக்குமேலாக தொடர்களாக நடைபெற்று) முடிவடைய இருக்கிறது. ஒரே நாளில் அல்லது 2 கட்டங்களாகக்கூட தேர்தல் ஆணையம் நினைத்து, சரியாகத் திட்டமிட்டிருந்தால், முடிந்திருக்கக் கூடியது. இது யாருடைய வசதிக்காக இப்படி பிரித்துப் பிரித்து நடத்தி, பிரதமர் மோடி போட்டியிடும் வண்ணம் வாரணாசி தொகுதி போன்றவை கடைசிக் கட்டமாக நடைபெற ஏற்பாடாகி, தேர்தல் முடிவுகள், வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றது.

400 சீட் கனவு: இந்தத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, பா.ஜ.க.வின் திட்டமிட்ட 400-க்குமேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற உரத்த குரல் முழக்கமும், அதற்கு 'ஒத்து ஊதி', 'கோரஸ்' பாடிய பெருமுதலாளிகளின் செய்தி ஊடகங்களான தொலைக்காட்சி நிறுவனங்களும், பிரபல ஹிந்தி, ஆங்கில நாளேடுகளும் இந்த 6 கட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முந்தைய பழைய 400 'பல்லவி'யைப் பாட முடியவில்லை. பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எண்ணம், சிதறு தேங்காயாகி, புஸ்வாணமாகி, ''பொய்யாய், கனவாகி, பழங்கதையாய்'' ஆகிவிட்டது!
பா.ஜ.க.வின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அளவுக்கு... கடுமையான ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை இந்தியா கூட்டணித் தலைவர்கள், குறிப்பாக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, அதுபோலவே, நாடு முழுவதும் காங்கிரஸ் பிரச்சார சூறாவளியாக - சுனாமியாக - மோடியின் கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்து - நாள்தோறும் இளந்தலைவர் ராகுலும், மற்ற கூட்டணித் தலைவர்களும் செய்யும் பிரச்சாரம் பா.ஜ.க.வின் 'வயிற்றில் புளியைக் கரைக்கிறது.'ஏழு கட்டத் தேர்தல்மூலம் எதிர்பார்க்கப்பட்ட - பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் எண்ணம் - விளைவு அவர்களுக்கு எதிர்விளைவாகவே அமைந்தது!
புளுகு பேச்சுகள்: அதனால்தான், ஒவ்வொரு கட்டத்திலும் நிதானமிழந்து, உச்சவரம்பின்றி, ''கோணிப் புளுகன் கோயபெல்சையும்'' மிஞ்சும் வகையில் தனது பொய்யுரைத் தொழிற்சாலையிலிருந்து புதுப்புது ''புரூடா''க்களை, துளியும் கூச்சநாச்சமின்றி, தேர்தல் விதிமுறை சட்டத்தை அலட்சியப்படுத்தி, பச்சையாகவே, வடபுலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி - ''ஹிந்துக்களின் சொத்துக்களை எல்லாம் இந்தியா கூட்டணி பதவிக்கு வந்தால், முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்.'' ''தாலியைப் பறித்து அவர்களுக்குத் தங்கமாகத் தருவார்கள்.'' ''எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, முஸ்லிம்களுக்கே தனி இட ஒதுக்கீடு என்று தாரைவார்ப்பார்கள்.'' ''இராமர் கோவிலை இடிப்பார்கள்; பால இராமன் மீண்டும் முந்தைய டெண்டுக்கே வந்துவிடச் செய்வார்கள்.'' ''ஸ்டாலின் பதவிக்கு வந்துவிடுவார்.'' ''இந்தியா கூட்டணித் தலைவர்களின் பேச்சு, அழகிகளின் போட்டி நடனம் என்ற அருவருக்கும் நடனமாக உள்ளது'' என்றெல்லாம் பேசியுள்ளார்.
தூக்கத்தை தொலைத்த மோடி: ''தூக்கத்தை இழந்தவர்கள்'' என்று தமிழ்நாட்டிற்கு வந்து பேசிய பிரதமர் மோடியும், அவரது ஏவுகணைகளும் இப்போது தூக்கத்தை இழந்ததோடு, துக்கத்தையும் சந்திக்கும்படி இந்தக் கடைசி கட்டத் தேர்தலும் ஆகிவிடுமோ? என்று பரவலாகப் பேசப்படுகிறது.
ஓட்டுப் பெட்டிகள் 'கருத்தரிக்கும்' வாய்ப்பும் நாளுக்கு நாள் - உச்சநீதிமன்ற வழக்குகளாலும், ஆணைகளாலும் மங்கி மங்கி வருகிறது!
நாடு உண்மை சுதந்திரத்தைப் பெற்று, ஜனநாயகம் வலிவும், பொலிவும் பெறட்டும்! இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications