சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனிமொழி vs தமிழிசை.. எச்.ராஜா vs கார்த்தி சிதம்பரம்.. அட அட தேர்தலில் செம போட்டி இருக்கும் போலயே!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எல்லாம் ஸ்டார் வேட்பாளர்களின் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த தேர்தலில் செம போட்டி இருக்கும் போலயே!

    சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எல்லாம் ஸ்டார் வேட்பாளர்களின் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பாஜக மொத்தம் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    ஒரே நாளில் கட்சி, கொடி, கொள்கை, வேட்பாளர்.. கலக்கும் மாஜி ஒரே நாளில் கட்சி, கொடி, கொள்கை, வேட்பாளர்.. கலக்கும் மாஜி "பாமக:" ராஜேஸ்வரி பிரியா!

    பாஜக எங்கு

    பாஜக எங்கு

    பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள்:
    கன்னியாகுமரி
    சிவகங்கை
    கோவை
    ராநாதபுரம்
    தூத்துக்குடி ஆகிய தொகுதிகள்தான்.

    தூத்துக்குடியில் போட்டி

    தூத்துக்குடியில் போட்டி

    இதில் தூத்துக்குடியில் திமுக போட்டியிட உள்ளது. அங்கு திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி கனிமொழி போட்டியிட இருக்கிறார். கனிமொழி அங்கு போட்டியிட உள்ளது 95% உறுதியாகிவிட்டது. இங்கு கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது.

    சிவகங்கை போட்டி

    சிவகங்கை போட்டி

    அதேபோல் சிவகங்கையில் பாஜக போட்டியிட உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இங்கே போட்டியிட இருக்கிறது. இங்கு காங்கிரஸ் சார்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் பாஜக சார்பாக இங்கு தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட வாய்ப்புள்ளது.

    கோயம்புத்தூர்

    கோயம்புத்தூர்

    அதேபோல் கோவையில் பாஜக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவையில் பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் யார் களமிறங்க உள்ளார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

    ராமநாதபுரம் போட்டி

    ராமநாதபுரம் போட்டி

    அதேபோல் ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இங்கு பாஜக யாரை நிறுத்த போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

    கன்னியாகுமரி போட்டி

    கன்னியாகுமரி போட்டி

    கன்னியகுமரியிலும் பாஜக போட்டியிட உள்ளது. இங்கு மீண்டும் மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கு போட்டியிட உள்ள காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வேட்பாளராக நிறுத்த வைக்க முயல்வதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    Lok Sabha Elections: BJP will contest in important 5 constituencies in Tamilnadu, will face star contestants in this election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X