விழா கோலம் பூண்ட நேரு ஸ்டேடியம்! ஆனாலும் ஒலிக்காத ஜோசப் விஜய் எனும் நான்? திரைமறைவில் நடப்பது என்ன?
சென்னை: தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு இதுவரை ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகர் அழைக்காத நிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெறாது என்றே தெரிகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திங்கள்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க 12 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக தவெக காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது ஆதரவை பெற்றது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியிடம் 5 எம்எல்ஏக்கள் இருப்பதால் இப்போதைக்கு தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. எனினும் 112 பேரின் ஆதரவுடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் பெரும்பான்மைக்கு 2 வாரம் கால அவகாசம் அளிக்குமாறும் விஜய் கோரியிருந்தார்.
இதற்காக சென்னை பனையூர் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய், ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார், வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில் விஜய் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைப்பார் ஆளுநர் அர்லேகர். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 2 நாட்கள் மட்டுமே ஆளுநர் அவகாசம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழாவுக்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரிய நிலையில் அவரை இதுவரை ஆளுநர் அர்லேகர் அழைக்கவில்லை.
மேலும் அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்களும் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. ஆளுநரும் இன்று கேரளாவுக்கு திரும்பிச் செல்கிறார். இதனால் இன்றைய தினம் பதவியேற்பு விழா நடைபெறாது என்றே சொல்லப்படுகிறது.
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா












Click it and Unblock the Notifications