குன்றத்தூர் கள்ளக்காதல்.. 4 வயது குழந்தைக்கு எமனாகிய ஆஷா ராணிக்கு ஆயுசுக்கும் மறக்க முடியாத தண்டனை
சென்னை: சென்னை குன்றத்தூரில் சரவணன் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார். அவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த சமயத்தில், வீட்டு வேலைக்காக வந்துள்ளார் அரக்கோணம் ஆஷா ராணி என்ற பெண். மனைவியிடம் சரவணன் விவாகரத்து கேட்டிருப்பதை அறிந்த ஆஷா ராணி, அவருடன் திருமணத்தை மீறிய உறவை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவருடைய சொத்துக்களை அடைய இடையூறாக இருந்த 4 வயது குழந்தைக்கு ஆஷா ராணி எமனாக மாறி உள்ளார். அதற்காக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பார்ப்போம்.
கள்ளக்காதல் என்பது இன்றைக்கு தொலைக்காட்சி சீரியல்களில் காட்டுவதை போலவும், அதைவிட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கும் பல பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த கள்ளக்காதல்கள் என்பது பொதுவாக நண்பர்கள், உறவினர்கள் இடையே ஏற்படும் பழக்கம் இறுதியில் தவறாக முடிகிறது. எல்லைமீறும் ஆண்களிடம், சில பெண்கள் விட்டுக்கொடுத்து செல்வது, அல்லது அதனை விரும்பி ஏற்றுக் கொள்வதால் கள்ளக்காதல்கள் ஏற்படுகிறது.

கள்ளக்காதல்
அதேபோல் கணவனின் செயல்கள் பிடிக்காமல் விரக்தியில் இருக்கும் பெண்கள், ஆதரவை வெளியில் தேடுகிறார்கள். அப்படி ஆதரவு தேடும் போதும் நட்பாய் வரும் ஆண்களால் கள்ளக்காதல்கள் ஏற்படுகின்றன. கள்ளக்காதல்கள் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன.. சமூகத்தில் மதுவால் எந்த அளவிற்கு குடும்பங்களில் பிரச்சனைகள் வருகிறதோ, அது போலவே கள்ளக்காதல்கள் காரணமாக வருகிறது.. சென்னையை அடுத்த குன்றத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
குன்றத்தூர் காதல்
சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்கிற சரவணன் வழக்கறிஞர் ஆவார். இவரது மனைவி, ஜெயந்தி. இந்த தம்பதிக்கு கோஷினி என்ற 4 வயது மகள் இருந்தார். வழக்கறிஞர் சரவணன் மற்றும் அவரது மனைவி ஜெயந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மேலும் இணைந்து வாழ விருப்பம் இல்லாத காரணத்தால், இருவருமே விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
ஆஷா ராணி
இந்த நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த வழக்கறிஞர் சரவணன் வீட்டிற்கு அரக்கோணத்தைச் சேர்ந்த ஆஷா ராணி என்பவர் வீட்டு வேலை செய்ய வந்திருக்கிறார். சரவணின் வீட்டில் வேலை செய்து வந்த ஆஷா ராணிக்கு அவரது வீட்டிற்கே உரிமையாளராக ஆசை வந்துள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் சரவணனுக்கும் வேலைக்காரியான ஆஷா ராணிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
குழந்தையை அழைத்து வந்தார்
எப்படியும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம் என்று நினைத்த ஆஷா ராணிக்கு சரவணின் மகள் அடிக்கடி வீட்டிற்கு வந்து போவது பிடிக்கவில்லையாம். மனைவியை பிரிந்து வாழ்ந்த சரவணன் வாரம் தோறும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தனது நான்கு வயது மகளான கோஷினியை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
கள்ளக்காதலுக்கு இடையூறு
இந்நிலையில் திருமணம் செய்து சரவணனையும் அவரது சொத்துக்களையும் அடைய நினைத்த வேலைக்காரியான ஆஷா ராணி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக குழந்தை கோஷினி இருப்பதாக கொதித்து போனார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து கோஷினியின் தாய் ஜெயந்தி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட குன்றத்தூர் போலீசார் ஆஷா ராணியை குழந்தையை கொலை செய்த வழக்கில் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
பின்னர் இது குறித்தான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் செல்வி.சசிரேகா கொலைக்கான சாட்சி ஆதாரங்களோடு, காஞ்சிபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நிரூபித்தார். கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிபதி ப.உ. செம்மல், வேலைக்கார பெண் ஆஷா ராணிக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் ஒரு பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இரு தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ஆஷா ராணி சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications