வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் - தமிழகத்தில் 5 நாட்களுக்கு அடி வெளுக்கப்போகும் மழை

அக்டோபர் 10ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 10ஆம் தேதியன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Low pressure in the Bay of Bengal - Light rain for 5 days in Tamil Nadu

தமிழ்நாட்டில் நேற்று பல ஊர்களில் பலத்த மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணியிலும் வெம்பாக்கத்திலும் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. செய்யாறு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணம், கூடலூர், ராணிப்பேட்டையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, வால்பாறையில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி ,ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ,வேலூர் , ராணிப்பேட்டை ,கோயம்புத்தூர் ,தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

Recommended Video

    Tamilnadu-ல் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    7ஆம் தேதியன்று வேலூர் ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அக்டோபர் 8ஆம் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், தருமபுரி,சேலம், ஈரோடு ,கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அக்டோபர் 9ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.10ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 10ஆம் தேதியன்று மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இன்று லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+