வேலையை காட்டப் போகும் வருண பகவான்! குமரி அருகே ‘மழை சக்கரம்’! அலர்ட்டா இருங்க மக்களே! எங்கெங்கே மழை?
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கன்னியாகுமரி கடல் பகுதியை நெருங்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான மாண்டஸ் புயல் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் மகாபலிபுரம் காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
அதே நேரத்தில் துரித ஏற்பாடுகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் திடீரென காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது அது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வழு குறைந்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (25-12-2022) காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டிருந்தது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (26-12-2022) காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

65 கிமீ வேகத்தில் காற்று
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 18 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை கரையை கடந்துள்ளது. திருகோணமலைக்கு தெற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் 65 கிமீ வேகத்தில் வீசும் எனவும், அதன்பின்,
அது தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்கள் மழை
தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் கன்னியாகுமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும் என்பதால், இதன் தாக்கத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் புதுச்சேரியில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 25 முதல் 26 வரை காரைக்கால். கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை காலை தாழ்வு மண்டலம் குமரி கடலுக்கு வரும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications