LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!
சென்னை: எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வணிக சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், பொதுமக்கள் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு, கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிடம் முன்பதிவு செய்வது அதிகரித்தது.

மேலும், சிறிய ஹோட்டல்கள், டீக்கடைகள் நடத்துபவர்கள், வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து உரிய ஆலோசனைகள் நடத்தி நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர்களை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும், எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள். அரசு பள்ளி கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகள் மற்றும் காலை சிற்றுண்டிகளுக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கல் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது. உணவகங்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் மட்டும் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் 70% ஆக உயர்த்தியுள்ளது. ஆகையால் நாளை முதல் 70% விநியோகிப்பதாக தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ கடும் குற்றமாகும். எனவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications