வீட்டு சிலிண்டர் விலையை விடுங்க..திடீர்னு உயர்ந்த அரிசி விலையை பாருங்க..விழிபிதுங்குது டெல்டா.. ஏன்
சென்னை: ஹோட்டல்கள், கடைகளுக்கு விநியோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்களில் முறைகேடு எழுந்துள்ளதாக புகார் கிளம்பி உள்ளது.. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளே நேரடி சோதனையில் இறங்கியது, பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
ரேஷன் கார்டு மூலமாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை சமீபத்தில் கொண்டுவந்தது.. அதன்படி, ரேஷன் கடைகளிலேயே இனிமேல் சமையல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டமானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு சங்கங்களும் ஏஜென்சிகளை நடத்தி வருகின்றன.
சிலிண்டர்கள்: அதன்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், தற்போது வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.. இதற்காக, ஏஜென்சிகளை பிரத்தியேகமாக நியமித்திருக்கிறது. இந்நிலையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உச்சம் பெற்றுள்ளதால், ஹோட்டல்கள், டீக்கடைகள் போன்ற இடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களை மறைத்து வைத்து, பயன்படுத்துவதாக பரவலாக புகார் எழுந்தது..
சிலிண்டர் விநியோகம்: அதாவது, சிலிண்டர் விநியோகம் செய்ய செல்லும்போது அவர்களின் வீடு பூட்டியிருந்தால், அந்த சிலிண்டரை ஏஜென்சி ஊழியர்கள், கடைகளில் விற்றவிடுவதாகவும் கூறப்படுகிறது... இதுபோன்ற புகார்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தொடர்ந்து சென்ற நிலையில், அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுவிட்டார்கள்.
அப்போது, சென்னை பூங்கா நகர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சிந்தாமணி காஸ் ஏஜென்சியில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், வணிக பயன்பாட்டுக்கு விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதுபோலவே, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மாம்பலம், ஆலந்தூர் ஏஜென்சிகளிலும் இப்படியான முறைகேடுகள் நடந்திருப்பதை இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள்..
முறைகேடு ஏஜென்ஸிகள்: இதையடுத்து, இந்தியன் ஆயில் தரப்பிலிருந்து திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.30 லட்சமும், சிந்தாமணி ஏஜென்சிக்கு ரூ.6.50 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, முறைகேட்டில் ஈடுபட்ட, 10 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அவர்களிடம் விளக்கம் கேட்டு, திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கமும் நோட்டீஸ் அளித்திருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications