GST மாதிரி.. கேஸ்க்கும் தனி கட்டணம்! பில் முறையை மாற்றிய சென்னை ஓட்டல்கள்
சென்னை: வழக்கமாக ஓட்டலுக்கு போனால், ஜிஎஸ்டி வரி என தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது கேஸ் தட்டுப்பாடு காரணமாக, கேஸ்க்கு தனி கட்டணத்தை ஓட்டல்கள் வசூலிக்க தொடங்கியுள்ளன.
ஓட்டல்களில் வணிக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டு சிலிண்டரை விட விலை அதிகம் என்பதால், உணவு விலையும் கூடுதலாக இருக்கும். இது போக, ஜிடிஎஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இப்போது கேஸ் சிலிண்டருக்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

என்ன பிரச்சனை?
ஈரான் போர் காரணமாக சிலிண்டர்கள் கிடைப்பது தட்டுப்பாடாக மாறியிருக்கிறது. சென்னையில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால், ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறியிருக்கின்றன. வருமான வரித்துறையினரின் ரெய்டுக்கு பயந்துதான், ஓட்டல்கள் சிலிண்டர் தட்டுப்பாடு என பேசுவதாக பாஜகவினர் கூறினர். ஆனால், சிலிண்டர் தட்டுப்பாடு டெல்லி உயர்நீதிமன்றம் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியாக நாடு முழுவதும் ஓட்டல்கள் பிரச்சனையை எதிர்கொண்டிருக்கின்றன.
சென்னை ஓட்டல்கள் நிலவரம்
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பேசும் ஓட்டல் ஓனர்கள், எரிபொருள் அதிகம் செலவாகும் பூரி, தோசை போன்ற உணவுகள் சப்ளை இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அதேபோல PG ஹாஸ்டல்களில் இனி இரண்டு வேளை மட்டுமே உணவு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எரிபொருள் கூடுதலாக செலவாகும் உணவுகள் சமைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய கட்டணம்
இது இப்படி இருக்கையில், மறுபுறம் ஓட்டல்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. குறிப்பாக, சென்னையில் ஜிஎஸ்டி கட்டணம் போல, கேஸ் சிலிண்டருக்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை பெருங்குடியில் உள்ள ஓட்டல் ஒன்று, கேஸ் கட்டணம் என ரூ.9.52-ஐ கட்டணமாக வசூலித்திருக்கிறது. மொத்தமாக 2 இட்லி, ஒரு மெதுவடைக்கு ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டலுக்கு சென்றால் கட்டணம் என்பதை தாண்டி, டிப்ஸ் உள்ளிட்ட விஷயங்களையும் சமாளிக்க வேண்டும். இப்போது கேஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பத வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications