பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்- நெடுமாறன் அறிவிப்புக்கு சீமானின் நாம் தமிழர் கட்சி மறுப்பு!

பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என்பது இந்திய உளவுத்துறையின் திட்டம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என்ற உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றிக்குமரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார் என அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் பழ.நெடுமாறன் வெளியிட்டார்.

 LTTE Chief Prabhakaran is not alive- Seemas Naam Tamilar party

பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

 LTTE Chief Prabhakaran is not alive- Seemas Naam Tamilar party

தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தார்.

 LTTE Chief Prabhakaran is not alive- Seemas Naam Tamilar party

ஆனால் இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றிக்குமரன் மறுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் தமது ட்விட்டர் பக்கத்தில், தேசிய தலைவரைப் பற்றிய கருத்து... இந்திய உளவுத்துறையின் திட்டம், ஐயா நெடுமாறன் மற்றும் சமீபகாலமாக "இந்து தமிழ்தேசியமென" கூறிவரும் காசி ஆனந்தன் ஆகியோர்களால் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. தமிழினமே விழித்திரு என பதிவிட்டுள்ளார்.

 LTTE Chief Prabhakaran is not alive- Seemas Naam Tamilar party

இதேபோல நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்கும் பிரபாகரன் குறித்து குறிப்பிடாமல், போலியான நம்பிக்கைகளை விதைப்பது மக்களை மடைமாற்றம் செய்யவே அன்றி, வேறில்லை! என பூடகமாக மறுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+