கவிக்கோ விருது தொகை ரூ1 லட்சத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் கவிஞர் அறிவுமதி
சென்னை: கவிக்கோ பொற்கிழி விருது தொகை ரூ1. லட்சத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார் கவிஞர் (பாவலர்) அறிவுமதி.
கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் இணைந்து இன்று மாலை இணையவழியில் கவிக்கோ விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வுக்கு கவிக்கோ அறக்கட்டளை பொருளாளர் வெ. சோலை நாதன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் கவிக்கோ விருது 2019- ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி, பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்பட்டது. வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்கத்தின் நிறுவனர்- தலைவருமான கோ. விசுவநாதன் இந்த கவிக்கோ விருதை பாவலர் அறிவுமதிக்கு வழங்கினார். கவிக்கோ அறக்கட்டளை செயலாளர் அயாஸ் பாஷா, அறிவுமதிக்கு பட்டயம் வழங்கினார்.

கவிக்கோ விருதை பெற்றுக் கொண்டு பேசிய பாவலர் அறிவுமதி, தமக்கு பொற்கிழியாக வழங்கப்பட்ட ரூ1 லட்சம் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழியக்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல்காதர், தமிழியக்கத்தின் பொருளாளர் பதுமனார், தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு. சுகுமார், தமிழியக்கத்தின் துணைச் செயலாளர் த. அன்பு, உறுப்பினர் பதிப்பாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாவலர் அறிவுமதியின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications