Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முரசொலி செல்வம் உடலை வீடியோ கால் மூலம் பார்த்து தேம்பி தேம்பி அழுத மு.க.அழகிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் மூத்த நிர்வாகியும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று பெங்களூரில் மாரடைப்பால காலமானார். சென்னை கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி, வெளிநாட்டில் இருப்பதால் நேரில் வரமுடியவில்லை.. இதனால் வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.


திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம், திமுகவின் அதிகாரப்பூர் நாளேடான முரசொலி நாளிதழை நடத்தி வந்தார். இவர் தான் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் ஆவார். 1941-ம் ஆண்டு ஏப்ரலில் பிறந்த இவருக்கு, நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தின் நினைவாக, பன்னீர்செல்வம் என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயர் சூட்டினார். நாளடைவில் இந்த பன்னீர்செல்வம் என்ற பெயர் மறைந்து, முரசொலி நாளிதழை நடத்தியதால் முரசொலி செல்வம் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

murasoli selvam mk alagiri


கருணாநிதியின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர், முதல்வர் ஸ்டாலினின் மாமா என்ற குடும்ப உறவுகள் இருந பின்னணியையும் தாண்டி, முரசொலி செல்வம் திமுகவில் முக்கியமானவராக இருந்தார். முரசொலியில் வரும் சிலந்தி தொடரை இவர் தான் எழுதிவந்தார். தன்னுடைய தாய் மாமாவான கருணாநிதியின் மகள் செல்வியை முரசொலி செல்வம் திருமணம் செய்து கொண்டார். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார். செல்வி - முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் உள்ளனர்.

பெங்களூரில் நேற்று காலை முரசொலி நாளிதழுக்காக கட்டுரை எழுதியவர், அப்படியே கண் அயர்ந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே முரசொலி செல்வம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்." என கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தார்,

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க... செல்வம் மாமா!
திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர் - முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி. செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு.
இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன். இயக்கப் பணி - பத்திரிகைப் பணி - திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன். அவருடன் நெருங்கிப் பழகியவன். கலைஞர் அவர்களைப் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகின்ற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட செல்வம் மாமா, 'இனி, வர மாட்டார்' என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது" என்று கூறியிருந்தார்.

இதனிடையே முரசொலி செல்வம் உடல், பெங்களூரில அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விட்டு தனது சகோதரி செல்விக்கு ஆறுதல் கூறினார். அதன்பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

முரசொலி செல்வத்தின் உடலுக்கு , அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் அஞ்சலி செலுதினார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சத்யராஜ், பிரசாந்த், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விஜய்வசந்த் எம்.பி., வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா உள்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முதல்வர் ஸ்டாலினின் அண்ணணுமாகிய மு.க.அழகிரி வெளிநாட்டில் இருப்பதால், முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரஇயலவில்லை.. இதனால் வீடியோ காலில் வந்து கண்ணீர் விட்டு அழுதார். முரசொலி செல்வத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மு.க.அழகிரி உடைந்து அழுதபடியே இருந்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. முரசொலி செல்வத்தின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+