மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி! நேரில் சென்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை 20 நிமிடங்கள் வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல் மருத்துவமனையில் இருந்த தனது அண்ணன் குடும்பத்தினருக்கு நம்பிக்கையூட்டிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

துரை தயாநிதியை பொறுத்தவரை தனது சித்தப்பா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் எப்போதும் சுமூகமாக போக்கை கடைபிடித்தவர். தனது அப்பாவும், சித்தப்பாவும் பேசிக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக தாம் பேசாமல் இருந்ததில்லை. உதயநிதி, சபரீசன் என எல்லோருடனும் கேசுவலாக பேசினார். அதேபோல் முடிந்தவரை குடும்ப சொந்தபந்தங்கள் எல்லோரிடமும் உறவுமுறை பேணி வந்தவர் துரை தயாநிதி.
துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக முக அழகிரி வட்டாரத்தில் நாம் விசாரித்தோம். ''நியூரோ பிரச்சனை என்று கூறுகிறார்கள், இது பற்றி எங்களுக்கும் முழு விவரம் தெரியவில்லை. ஆனால் அழகிரி அண்ணன் திடீரென்று மகனுக்கு இப்படி ஆனவுடன் பதறிப்போய்விட்டார். இன்று முதலமைச்சர் நேரில் போய் மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி விசாரித்ததுடன் 2 முறை அண்ணனிடம் போனிலும் பேசியிருக்கிறார். அவர் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பது தான் எங்கள் வேண்டுதல்'' என்றார்கள்.
துரை தயாநிதியை பொறுத்தவரை தனது சித்தப்பா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் எப்போதும் சுமூகமாக போக்கை கடைபிடித்தவர். தனது அப்பாவும், சித்தப்பாவும் பேசிக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக தாம் பேசாமல் இருந்ததில்லை. உதயநிதி, சபரீசன் என எல்லோருடனும் கேசுவலாக பேசினார். அதேபோல் முடிந்தவரை குடும்ப சொந்தபந்தங்கள் எலோரிடமும் உறவுமுறை பேணி வந்தவர் துரை தயாநிதி.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications