Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு கப்பலில் வந்த வெள்ளை யானைகள்.. ஐஸ் ஹவுஸ் உருவான வரலாறு தெரியுமா? #MadrasDay

Subscribe to Oneindia Tamil

சென்னை : பெரும் பழமையும் பெருமையும் வாய்ந்த சென்னை நகரம் உருவான நாள் 'மெட்ராஸ் டே' ஆக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றான 'ஐஸ் ஹவுஸ்' பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

Recommended Video

    Madras Day : Chennai-ல் இதுவரை கொண்டுவரப்பட்ட சிறந்த திட்டங்கள்

    உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி திருவல்லிக்கேணியில் அமைந்திருப்பது ஐஸ் ஹவுஸ். இந்த 'ஐஸ் ஹவுஸ்' அமைக்கப்பட்டதற்கான காரணமே சற்று சுவாரஸ்யமானது.

    இந்தக் கட்டிடத்திற்குத்தான் அமெரிக்க வெண்பணி ஏரிகளில் இருந்து வெள்ளை யானைகள் கப்பலில் வந்திறங்கின. ஆங்கிலேயர்களின் கேளிக்கைக்காக இந்திய மக்களின் உழைப்பால் உருவானது இந்தக் கட்டிடம்.

    வியாபாரம் செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்திறங்கிய ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி ஸ்தாபனத்தை விஸ்தரித்து நாட்டையே ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தனர்.

    பார்ட்டிக்கு ஐஸ்

    பார்ட்டிக்கு ஐஸ்

    கடுமையான குளிர் பிரதேசமாக இருந்த இங்கிலாந்தில் இருந்து வந்திறங்கிய ஆங்கிலேயர்களுக்கு பெரிய தொல்லையாக இருந்தது இந்தியாவின் வெப்பச் சூழல். அதைத் தவிர்க்கவே, ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் நகரங்களைக் கட்டமைத்தனர். வெயில் பிரதேசமான சென்னையில் வசித்த ஆங்கிலேயர்கள், பார்ட்டிகளில் மதுவோடு கலக்க ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதை விருப்பமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இங்கு கிடைக்கும் ஐஸ் கட்டிகள் பிடிக்காமல், அமெரிக்க பனி ஏரிகளில் இருந்து ஐஸ் கட்டிகளை வரவழைத்துப் பயன்படுத்துவதையே விரும்பினர்.

    ஐஸ் கட்டி வியாபாரி

    ஐஸ் கட்டி வியாபாரி

    அமெரிக்க ஏரிகளின் பனிக்கட்டிகளை வெட்டி எடுத்து உலகம் முழுவதும் விற்றுப் புகழ் பெற்றவர் ஃப்ரெட்ரிக் டூடர் என்ற வணிகர். அவரே இந்தியாவிலும் ஐஸ் வணிகம் செய்யும் பணியைத் தொடங்குகிறார். அந்த ஐஸ் கட்டிகளை கரையாமல் நீண்ட நாட்களுக்கு இங்கு பாதுகாக்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து, மும்பை, கொல்கத்தா, சென்னையில் இதற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டன. சென்னையில் மெரினா கடற்கரைக்கு எதிரே 1842ல் கட்டப்பட்டது ஒரு பிரமாண்ட கட்டடம்.

    ஜன்னல்கள் இல்லாமல்

    ஜன்னல்கள் இல்லாமல்

    இந்தக் கட்டிடம் ஆங்கிலேயர்களால் ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டது.​ இதனால் இது ‘ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. அமெரிக்க பனி ஏரிகளில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு கப்பலில் கொண்டு வரப்பட்ட ஐஸ்கட்டிகளைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தினர். கப்பலில் கொண்டு வந்து இறக்கப்பட்ட ஐஸ் கட்டிகள் உருகி விடாமல் பாதுகாப்பாக இருக்க உயரமான சுவர்கள், அகலமான சுவர்களோடு, ஜன்னல்கள் இல்லாத கட்டிடமாக இதனை அமைத்தனர்.

     வெள்ளை யானை

    வெள்ளை யானை

    ஐஸ் கட்டிகள் என்றால், சிறிய கியூப்களாக அல்ல. பிரமாண்டமான தூண்களைப் போன்ற பனிப்பாறைகள் கப்பலில் ஐஸ் ஹவுஸுக்கு வந்து சேரும். இந்தப் பிரமாண்ட ஐஸ் கட்டிகள் வெள்ளை யானைகளைப் போல இருப்பதால் அதிசயித்துப் போயினர் சென்னை வாழ் தமிழர்கள். அந்த வெள்ளை யானைகளை உடைத்து ஆங்கிலேயர்களின் மதுக் குப்பிகளுக்கு அனுப்புவதற்காக ஐஸ் ஹவுஸ் தொழிற்சாலையில் ஏராளமான தமிழர்கள் அக்காலத்தில் ஈடுபட்டிருந்தனர். ஐஸ் ஹவுஸில் பனிக்கட்டி வழுக்கி, சுவற்றில் மோதியதில் சிலர் நசுங்கி இறந்தும் போயிருக்கின்றனர். அத்தகைய பிரமாண்டமானது ஐஸ் ஹவுஸ். ஐஸ் ஹவுஸை மையமாகக் கொண்டு ரத்தமும் சதையுமான வாழ்க்கையை எழுத்தாளர் ஜெயமோகன் ‘வெள்ளை யானை' என்ற நாவலாக எழுதியிருக்கிறார்.

    ராமகிருஷ்ண மடம்

    ராமகிருஷ்ண மடம்

    இந்த ஐஸ் ஹவுஸ் தான் இன்று விவேகானந்தர் நினைவு இல்லம் என்று அழைக்கப்படுகிறது. 1897ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தான் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை,​​ சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடங்கினார்.​ 1906 வரை 10 ஆண்டுகள் மடம் இங்குதான் இயங்கியது. பின்னர் 1917-ல் அப்போதைய ஆங்கிலேயே இந்த வீட்டை பிராமண விதவைகளுக்கான ஹாஸ்டலாக மாற்றியது. பின்னர் ஆங்கிலேயேர் காலத்துக்குப் பின் தமிழக அரசுக்குச் சொந்தமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த இல்லத்தை சென்னை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்குப் பெற்று நிர்வகித்து வருகிறது.

     விவேகானந்தர் இல்லம்

    விவேகானந்தர் இல்லம்

    1963ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தக் கட்டடத்துக்கு விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசு பெயர் சூட்டியது. இன்றளவும் இந்தக் கட்டிடம் செயல்பாட்டில் இருக்கிறது. அதே காலகட்டத்தில் மும்பை, கொல்கத்தா நகரங்களிலும் கட்டப்பட்ட ஐஸ் ஹவுஸ் கட்டிடங்கள், காலத்தில் கரைந்து காணாமல் போய்விட்ட நிலையிலும், சென்னையில் அமைக்கப்பட்ட ஐஸ் ஹவுஸ் கட்டடம் மட்டும் இன்றும் வரலாற்றைப் பறைசாற்றி நிற்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+