சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சியை 28-ம் தேதி துவங்கலாம் - ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சியை வரும் 28-ம் தேதி முதல் துவங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 47-வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரில் பங்கேற்க அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த 'ஃபன் வேர்ல்ட்' (Fun World) என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கி தொகையை செலுத்தாததால், டென்டரில் கலந்து கொள்ளும் தகுதியை அந்த நிறுவனம் இழந்து விட்டது. எனவே அதன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என விளக்கம் அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட தனி நீதிபதி, அந்த வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி
செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து 'ஃபன் வேர்ல்டு' நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும், டிசம்பர் 28-ம் தேதி முதல் பொருட்காட்சி துவங்க உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, பொருட்காட்சியை திட்டமிட்டபடி துவங்க அனுமதியளித்த நீதிபதிகள், ரூ.50 ஆயிரம் அபராததுக்கு மட்டும் தடை விதித்து, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications