சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் உத்தரவு

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என்பதை ஆராய்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான பின் 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆராய்ந்து
தேர்தல் முடிவுகள் வெளியான 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras HC seeks EC’s response on petition seeking election manifestos

கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆய்வு செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது எனக் கூறியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது 2016 ஆகஸ்டில் தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், தற்போது உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்த கோரிக்கை தொடர்பாக மனுதாரர் அமைப்பு அளித்த மனுவை, தேர்தலுக்கு பின் பரிசீலித்து, தேர்தல் முடிவுகள் வெளியான பின், 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

English summary
The Chennai High Court has directed the Election Commission to issue an order within two months of the release of the election results.Investigate whether the election statements of political parties are subject to the Code of Conduct
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X