• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபார்ஷன்.. பாத்ரூமில் நடந்த பகீர்.. பெண் டாக்டர் வாயில் கோமியத்தை ஊற்றி டார்ச்சர்.. 7 வருஷம் ஜெயில்

Google Oneindia Tamil News

சென்னை: மனைவி என்றும் பாராமல், ஒரு பெண் என்றும் பாராமல், ஒரு டாக்டர் என்றும் பாராமல், மனிதாபிமானமும் இல்லாமல், கோமியத்தை குடிக்க வைத்து டார்ச்சர் செய்தே கொன்றுள்ளார் கொடூர கணவர்.. அவருக்குதான் 7 வருஷம் தண்டனையை ஹைகோர்ட் தந்துள்ளது..!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்தவர் மரியானோ ஆன்டோ புருனோ.. 36 வயதாகிறது..

இவரது மனைவி பெயர் அமலி விக்டாரியா.. 32 வயதாகிறது.. இவரும் ஒரு டாக்டர்.. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

அழுதுகொண்டே ஒவ்வொரு மாத்திரையை விழுங்கி, தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி பெண்.. அழுதுகொண்டே ஒவ்வொரு மாத்திரையை விழுங்கி, தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி பெண்..

மாமியார்

மாமியார்

கடந்த 2005-ல் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. அயனாவரத்தில்தான் வீடு.. மாமியார், மாமனார், கணவருடன் விக்டோரியா வசித்து வந்தார்.. 2007-ல் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்துக்கு சென்ற விக்டோரியா, குழந்தையை பெற்றெடுத்து கொண்டு மறுபடியும் மாமியார் வீட்டுக்கு வந்தார்.. அப்போது, விக்டோரியா பெயரில் உள்ள சொத்துகளை தங்கள் பெயரில் எழுதி வைக்க சொல்லி டார்ச்சர் செய்துள்ளனர் மாமியார் குடும்பத்தினர்..

 சொத்து பிரச்சனை

சொத்து பிரச்சனை

தினமும் இந்த சொத்து பிரச்சனை நடந்துள்ளது.. அதனால் தாக்குதலும் விக்டோரியா மீது நடத்தப்பட்டது. பொறுத்து பொறுத்து பார்த்த டாக்டர் விக்டோரியா, 2014-ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.. இது தொடர்பான வழக்கு விசாரணையும் ஆரம்பமானது.. இறுதியில் மரியானோ ஆன்டோ புருனோ, அவரது அம்மா அல்போன்சாள், அப்பா ஜான் பிரிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. சென்னை மகளிர் நீதிமன்றத்தில், கணவர் மற்றும் மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது..

தீர்ப்பு

தீர்ப்பு

பிறகு இருவருக்கும் 7 வருட சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்... ஆனால், அப்பா விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆன்டோ புருனோ, அவரது அம்மா இருவரும் ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் அப்பீலுக்கு போனார்கள்.. வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது... அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சுகேந்திரன், இறந்துபோன பெண்ணின் தாய் தரப்பில் எஸ்.சங்கர் ஆகியோர் ஆஜராகினார்கள்..

கர்ப்பம்

கர்ப்பம்

கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வாதிடும்போது பல திடுக் தகவல்களை தெரிவித்தார்.. வரதட்சணை கேட்டு விக்டோரியாவை அவரது கணவரும், மாமியாரும் துன்புறுத்தி வந்தனர் என்றாலும், விக்டோரியாவுக்கு 2014ல் ஒரு அபார்ஷன் ஆகியுள்ளது.. அதற்கு பிறகு அவர் கர்ப்பம் தரிக்கவில்லை.. குழந்தை இல்லை என்பதற்காக வீட்டில் பூஜைகளை மாமியார், மாமனார் நடத்தி இருக்கிறார்கள்.. அப்போது விக்டோரியாவை கோமியம் குடிக்க சொன்னார்களாம்.. அதற்காக கட்டாயப்படுத்தியும் உள்ளனர்..

 தண்டனை உறுதி

தண்டனை உறுதி

இதற்கான அனைத்து ஆதாரங்களையும் போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதால், மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விக்டோரியா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களும் தீர ஆய்வு செய்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.... நன்கு படித்த டாக்டர் தற்கொலைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே இந்த கோர்ட் கருதுகிறது. எனவே, அவரது மரணத்துக்கு காரணமான மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது" என்று தீர்ப்பளித்தார்.

English summary
Madras HC upheld the sentence for the culprits of Doctor Amali Victoria Suicide Case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X