சாதி ரீதியான பாகுபாடுகளை தடுக்க.. கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி கேமரா..தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்துகளில் தலித் தலைவர்கள் பாரபட்சமாகச் சாதி ரீதியான பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 6 பஞ்சாயத்துத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தலித் தலைவர்கள் உள்ள பஞ்சாயத்துக்களில் சாதிரீதியான பாகுபாடு நடைபெறுவதாகவும், குறிப்பாக தலித் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை, பஞ்சாயத்து அலுவலகங்களில் அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படுவதில்லை, ஆவணங்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை, பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி ,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications