யூடியூபர்கள் பின்னால் அரசு.. மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு நிர்வாகம் குறித்த கருத்துகளை முடக்கியதால் தான் சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் விழித்துக் கொண்டு சுதந்திரம் பெற்றோம். இப்போது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என சவுக்கு சங்கர் வழக்கில் கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நிதிமன்றம், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Savukku Shankar high court police

சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம் குறிப்பிட்டனர்.

மேலும், வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதிகள்," கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிராக மக்களைப் போராட்டத்திற்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்... கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டம் தொடர்பாக மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாமதமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சவுக்கு சங்கர் கைது தொடர்பாக யாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்ற விபரங்கள் குறிப்பிடப்படவில்லை எனவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் சவுக்கு சங்கருக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அது குறித்த காரணங்கள் உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை, சவுக்கு சங்கருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையானதாக தெரியவில்லை.. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது" எனவும் கூறி அந்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.

மேலும், தனிநபர்கள் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை குண்டர் சட்டத்தை பயன்படுத்தி கடிவாளம் போடுவதால் எந்த முடிவும் ஏற்படாது என தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த இணையதள யுகத்தில், பல தளங்களில் இருந்து தகவல்கள் குவிகின்றன. ஒவ்வொரு கருத்துக்களுக்கும் எதிராக அரசு இயந்திரம் நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை. குடிமக்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்களை பெறாவிட்டால் அது ஜனநாயகமாக இருக்காது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடக பதிவுகளுக்கும், யூ டியூப் பதிவுகளுக்கும் பின்னால் அரசு செல்வதால், யாருடைய கருத்தும் மாறப் போவதில்லை. மாறாக பேச்சு சுதந்திரத்தை முடக்குவதாகவே கருதுவதுடன், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவிக்கும் சிறிய குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், அனைவரின் குரலையும் ஒடுக்கி விட முடியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது தான் எனத் தெரிவித்துள்ளனர்.

பிற ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், சமூக ஊடகங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என அறிவுறுத்திய நீதிபதிகள், சாதாரண மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்களை அரசு கருத வேண்டுமே தவிர, அந்த ஊடகங்களை முடக்க முயற்சிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அரசு நிர்வாகம் குறித்த கருத்துகளை முடக்கியதால் தான் சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் விழித்துக் கொண்டு சுதந்திரம் பெற்றோம். இப்போது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+