போதைப்பொருள் கடத்தல்.. ED வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலிமுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாபர் சாதிக் கைது செய்யபட்டிருந்தார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட வழக்கில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிமுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன்க் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில், ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications