தேவநாதன் யாதவ்வுக்கு இடைக்கால ஜாமீன்! பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் கோர்ட் உத்தரவு
சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அவருடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கபட்டவர்கள் தரப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பாதிக்கபட்ட அனைவரும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பண பலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கபட்டது.
காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்திவைப்பு வழங்குவதில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, தேவநாத யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா?என்பது குறித்து தேவநாதன் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தேவநாதன் யாதவ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேவநாதன் யாதவ் 3ஆவது முறையாக ஜாமீன் கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், தேவநாதன் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு இடங்களில், 136 ஏக்கரில், 440 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேவநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதி, அவருக்கு 6 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். மேலும் தேவநாதனின் சொந்த நிதியிலிருந்து ரூ 100 கோடியை உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டார். தேவநாதன் திங்கள்கிழமை தோறும் உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications