பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட ஹைகோர்ட் அதிரடி தடை
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லைகா பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் - முதல் பாகம் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கியுள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் எப்படி உருவாக்கி இருக்கிறார்? இதில் சர்ச்சைகள் எழுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
பான்-இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட புரமோஷனுக்காக ஒவ்வொரு மாநிலமாக நடிகர்கல் சென்று வருகின்றனர். இந்தப் படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட்செலவில், இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும், எனவே சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சட்டவிரோதமாக இணையதளங்களில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications