Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு 1 மாத சிறை தண்டனை.. அதிர வைத்த சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CDMA) முன்னாள் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Madras High Court Sentences IAS Officer Anshul Mishra to One Month in Jail for Contempt of Court

சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால் அந்த நிலத்தை தங்களிடமே திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2003 ஆம் ஆண்டு லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக் கொடுத்த நிலையில் 6.5 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்திற்கு தேவை என கூறி, வீட்டு வசதி வாரியம் தன் வசம் வைத்துக் கொண்டது.

அந்த நிலமும் உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் திருப்பி தரக்கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து 2 மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தி பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று உறுப்பினர் செயலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, குறித்த காலத்தில் உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு 1 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த தொகையை அன்சுல் மிஸ்ராவின் ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும் என்றும், மூன்று வாரங்களில் இழப்பீடு தொகையை வழங்காவிட்டால் மேலும், 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி வேல்முருகன், குறித்த காலத்தில் மேல்முறையீடு செய்யாவிட்டால் அன்சுல் மிஸ்ரா தண்டனையை அனுபவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+