Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதிக்கப்பட்ட பெண் முன்னாடியே அந்தரங்க வீடியோவை பார்ப்பதா? 7 போலீஸுக்கு ஹைகோர்ட் நீதிபதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அந்தரங்க வீடியோவை பார்ப்பதா? என காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.

chennai highcourt

சென்னை உயர்நீதிமன்றத்தில் இளம்பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுில் கூறியிருப்பதாவது: கல்லூரியில் படிக்கும் போது ஒருத்தரை காதலித்தேன். அப்போது அவருடன் நெருங்கி பழகினேன். என்னை ஏமாற்றிய அவர் அந்தரங்க வீடியோக்களை எடுத்துள்ளார்.

அதை இணையதளங்களில் பரப்பியுள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்து அவற்றை நீக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த மாதம் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த வீடியோவை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் ஆனந்த வெங்கடேஷ் கண் கலங்கினார். இதையடுத்து இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை 48 மணி நேரத்திற்குள் இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அதிரடியாக கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார்.

மேலும் இது போன்ற விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தமிழக காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக டிஜிபி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த பெண் வழக்கறிஞர் தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் 70 இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை உள்ள அனைத்து இணையதளங்களையும் மத்திய அரசு முடக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ இடம் பெற்ற அனைத்து தளங்களையும் முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும் அதை தடுக்க வேண்டும் என்றும் பெண் வழக்கறிஞர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை அகற்ற எங்கு புகார் அளிக்க வேண்டும், அப்படி யாராவது புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான மனுதாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டதுடன் குற்றம்சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காக அந்த அந்தரங்க வீடியோக்களை அந்த பெண் முன்பே 7 காவல் துறையினர் பார்த்துவிட்டு விசாரித்தனர். இதை அறிந்த நீதிபதி கண்டனம் தெரிவித்தார். காவல் துறையின் இந்த செயல் பாதிக்கப்பட்ட பெண்ணை மன உளைச்சலுக்குள்ளாக்கும் என்றும் இது போன்ற வழக்குகளில் விசாரணைக்கு பெண் காவல் துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் எஃப்ஐஆரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்க வேண்டும் என காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+