"தலை தப்புமா!" தங்கம் தென்னரசு & கேகேஎஸ்எஸ்ஆர் சொத்து குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு
சென்னை: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை மறு ஆய்வுக்குச் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து எடுத்தது. இதற்கிடையே இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில், அந்த வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்தன.

தாமாக முன்வந்து வழக்கு விசாரணை: இருப்பினும், இந்த உத்தரவுகளைத் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். ஆனாலும், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இருப்பினும், சுப்ரீம் கோர்ட் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கோரிக்கையை ஏற்கவில்லை. மேலும், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்குகளை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதைச் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரித்தார்.
23 வன்னியர் எம்எல்ஏக்களில் 2 பேர் அமைச்சர்! ஆனால்..இசைவேளாளர் எத்தனை பேர் தெரியுமா? அன்புமணி அட்டாக்
வழக்கு: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இருப்பினும், அவர்களை ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்து இருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அதேபோல கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையும் நடந்தது.
நாளை தீர்ப்பு: இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர்கள் சார்பில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார். இதற்கிடையே இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் நாளை (ஆக. 7) காலை வழங்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications