மதுரைக்கு 3000, கோவைக்கு 4000, கன்னியாகுமரிக்கு 4500.. தலை சுற்ற வைக்கும் ஆம்னி பஸ் கட்டணம்
சென்னை: சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகிறார்கள். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுமுறையை கழிப்பது வழக்கம் ஆகும். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் அரையாண்டு பள்ளி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. நாகர்கோவில் மற்றும் கோவைக்கு 4500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது
சென்னையை பொறுத்தவரை பல லட்சம் மக்கள் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு வந்து வசிக்கிறார்கள். பிழைப்பு தேடி வந்த மக்கள், பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம், ரம்ஜான் போன்ற பண்டிகைகளில் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல் பள்ளி விடுமுறை காலங்களான காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, முழு ஆண்டு விடுமுறை காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் பலரும் சொந்த ஊர் சென்று திரும்புவார்கள். மேலும் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்புகிறார்கள். ஆனால் கட்டணம் மிகப்பெரிய அளவில் இருக்கும். சாமானிய மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப அரசு பேருந்துகள் தான் ஒரே வழி. ஆம்னி பேருந்துகளில் எல்லாம் டிக்கெட் கட்டணம். கடுமையாக இருக்கும்.
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நாட்களில் அதிக அளவிலான மக்கள் பயணம் மேற்கொள்வதை வைத்து ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்காக உயர்த்துகிறார்கள். அந்த வகையில், டிசம்பர் மாத இறுதியில் வரும் பள்ளி அரையாண்டு தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்திருக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவே பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். இதையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. சாதாரண நாட்களில் நெல்லை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்ல ரூ.800 முதல் ரூ.1,200 வரை கட்டணமே வசூலிக்கப்படும். ஆனால் தற்போது பல மடங்கு அதிகரித்து ஒரு டிக்கெட் குறைந்தது 1000 முதல் 45000 வரை இருக்கிறது.
சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு படுக்கை வசதி உள்ள ஆம்னி பஸ்களில் ரூ.4 ஆயிரம் என்பது சாதாரணமாக இருக்கிறது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லை மற்றும் நாகர்கோவில் நகரங்களுக்கு செல்ல படுக்கை வசதி உள்ள பேருந்துகளில் ரூ.4 ஆயிரத்து 500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடிக்கு செல்ல ரூ.4 ஆயிரத்து 300 வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு செல்ல ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேனி, திண்டுக்கல் செல்ல, 3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலத்திற்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் போக விரும்பும் போது, கட்டணம் பன்மடங்கு உயர்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வைச் சமாளிக்கவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவித்துள்ளது. எனவே கிளாம்பாக்கம் சென்று அரசு பேருந்துகளில் ஏறினால் கட்டணம் குறைவாகவே இருக்கும். அங்கு மக்களின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப அரசு போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை உடனுக்குடன் இயக்கும். எனவே டிக்கெட் கட்டணத்தை பார்த்து மிரளாமல், அரசு பேருந்துகளில் சென்று வந்தால், மக்கள் நிறைய பணத்தை மிச்சம் வைக்கலாம்.












Click it and Unblock the Notifications