4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு.. திருப்பரங்குன்றத்துக்கு அன்புசெழியன் விருப்ப மனு
Recommended Video
சென்னை:திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பிரபல சினிமா தயாரிப்பாளரும், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணியின் துணை செயலாளர் ஜி.என். அன்புசெழியன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வினியோகம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்றனர். பின்னர் அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.

விருப்ப மனு அளித்தனர்
காலை முதலே இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் பலர் விருப்ப மனு அளித்தனர். அதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

நேர்காணல் நிறைவு
மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிருப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி
அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றாலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குப்பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம்... திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றி நீதிமன்றம் வரை சென்றது தான்.

அன்பு செழியன் மனு
இந்த தொகுதியில் பலர் விருப்ப மனு செய்திருந்தாலும்... அனைவரும் உற்று நோக்குவது மதுரை அன்பு செழியனைத் தான். அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணியின் துணை செயலாளராக உள்ளார்.

சினிமா பைனான்சியர்
திரைப்பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் அன்பு செழியன் என்றால் தான் பலருக்கும் நினைவு வரும். அன்புசெழியனும், விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலில் கலந்துகொண்டு விட்டார். நேர் காணல் முடிந்துவிட்ட நிலையில் யார், யார் வேட்பாளர்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications