Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 ஆண்டுகளில் 4வது கட்சி.. அதிமுகவில் இணைந்த ‛டாக்டர் சரவணன்' பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து கடந்த ஆகஸ்ட்டில் விலகிய மதுரை டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணையலாம் என கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென்று அவர் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதன்மூலம் அவர் மதிமுக, திமுக, பாஜகவை தொடர்ந்து அதிமுகவில் இணைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் சரவணன் 4வது கட்சியாக அதிமுகவுக்கு தாவியுள்ள நிலையில் அவர் யார்? எதற்காக அதிமுகவில் இணைந்தார்? என்பது பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகராக இருப்பவர் சரவணன். டாக்டரான இவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் சமயத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகள் செய்தார். இவர் பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. அதாவது கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது அஞ்சலி செலுத்தும் தகராறை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்தது.

அதிமுகவில் ஐக்கியம்

அதிமுகவில் ஐக்கியம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு பழனிவேல் தியாகராஜனை அவரது வீட்டில் சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் திமுகவில் மீண்டும் இணைவார் என கூறப்பட்ட நிலையில் இன்று அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைந்தார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த டாக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் இணைத்து கொண்டார்.

8 ஆண்டில் 4 வது கட்சி

8 ஆண்டில் 4 வது கட்சி

இந்நிலையில் தான் டாக்டர் சரவணன் கடந்த 8 ஆண்டுகளில் 4 முறை கட்சி தாவியுள்ள விஷயம் வெளியாகி உள்ளது. 2015ல் மதிமுகவில் செயல்பட்ட சரவணன் 2016ல் திமுகவில் இணைந்து எம்எல்ஏவானார். அதன்பிறகு கடந்த 2021ல் திமுகவில் சீட் கிடைக்காததால் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் ஓராண்டிலேயே அங்கிருந்து விலகினார். அதன்பிறகு தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். இவ்வாறு அவர் கட்சி மாறியதற்கான காரணங்கள் வருமாறு:

முதல் விலகல் எப்போது?

முதல் விலகல் எப்போது?

டாக்டர் சரவணன் மதிமுகவில் செயல்பட்டு வந்தார். மதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த இவர் திடீரென விலகி வைகோவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். தேர்தல் வேளையில் கூட்டணி சார்ந்த முடிவு எடுப்பதில் குழப்பம் நிலவுததாக குற்றம்சாட்டிய அவர் மதிமுகவுக்கு குட்பை சொன்னார். இதையடுத்து சிறிது காலம் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

திமுவில் விலகியது ஏன்?

திமுவில் விலகியது ஏன்?

அதன்பிறகு கடந்த 2016ல் முக ஸ்டாலின் முன்னிலையில் டாக்டர் சரவணன் திமுவில் இணைந்தார். இதையடுத்து திமுகவின் மருத்துவ அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டு வந்தார். 2017ல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் தோல்வியடைந்தார். இதில் அதிமுகவின் ஏகே போஸ் வெற்றி பெற்றார். ஆனால் அவர் காலமானதால் மீண்டும் 2019ல் தேர்தல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் சரவணன் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தனது சொந்த நிதியை செலவழித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் நலத்திட்டங்களை செய்தார். குறிப்பாக கொரோனா சமயத்தில் உதவிகள் செய்தார். 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அந்த தொகுதி திமுகவின் கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியடைந்து திமுகவுக்கு முழுக்கு போட்டார்.

பாஜகவில் இருந்து விலகல் ஏன்?

பாஜகவில் இருந்து விலகல் ஏன்?

மேலும் சரவணன் உடனே பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அடுத்த சில மணிநேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட டாக்டர் சரவணனுக்கு பாஜக சீட் வழங்கியது. இதையடுத்த அந்த தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது. இதையடுத்து டாக்டர் சரவணன் இரவோடு இரவாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கோரினார். மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ட்விஸ்ட்டாக அதிமுகவில் இணைந்தார்

ட்விஸ்ட்டாக அதிமுகவில் இணைந்தார்

இந்நிலையில் தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணையலாம் என்ற தகவல்கள் பரவின. ஆனால் இதற்கு மாறாக அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவில் இணைந்துள்ளார். இவ்வாறு கடந்த 2015ல் இருந்து 2013ம் ஆண்டு வரை 8 வருடத்தில் 4வது கட்சியாக அதிமுகவில் டாக்டர் சரவணன் அடியெடுத்து வைத்துள்ளார்.

அதிமுகவில் இணைந்தது ஏன்?

அதிமுகவில் இணைந்தது ஏன்?

இந்நிலையில் தான் அதிமுகவில் இணைந்தது ஏன்? என சரவணனிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‛‛மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இதற்காக ஒரு இயக்கம், பிளாட்பார்ம் வேண்டும். புதுவருடம் வரட்டும் என காத்திருந்து அதிமுகவில் இணையும் முடிவை எடுத்துள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி எதார்த்தமான நபர். மக்கள் எளிதில் அணுகக்கூடிய நபராக இருக்கிறார். சட்டசபையில் அவரது செயல்பாட்டை நான் பார்த்திருக்கிறேன். இப்போது பொதுமக்களும் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு சப்போர்ட்டாக பேசக்கூடிய சூழல் இருக்கிறது. அதனால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன்'' என பதிலளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+