மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. முன்கூட்டியே வரப்போகுது.. உதயநிதி கொடுத்த ஜாக்பாட் அப்டேட்!
சென்னை: இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே, அதாவது டிசம்பர் 12 ஆம் தேதி வங்கி கணக்கிற்கு வரும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தமிழக பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
இருப்பினும் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்தவகையில் அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் மகளிர் உரிமைத் தொகை வேண்டி இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் அளித்த மனுக்கள் தான் பெரும்பான்மை. நவம்பர் 15 வரை நடைபெற்ற இந்த முகாம்களில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்தனர்.
இந்த பணி நவம்பரில் முடிவடையும் எனவும் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்வர் முடிவெடுத்துள்ளதாகவும் சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகாசியில் மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது, கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம்12 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும் பலருக்கு வழங்கப்பட உள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் விண்ணப்பித்து சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், இந்த மாதம் முதல் அவர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 1000 கிடைக்க உள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications