மகேந்திரன் சொன்ன தமிழக மின்சார நெருக்கடி.. 6 மாசம் கரண்ட் கட் இருந்தா என்ன? பிரபல நடிகர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுப் பிரச்னை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசிய கருத்துக்கள், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்களின் பாதிப்பை உணராமல் அலட்சியமாக பேசியதாகக் கூறி, இணையவாசிகள் பலரும் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறி நடிகர் மகேந்திரன் தற்போது புதிய விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே கரண்ட் பிரச்சனை தலைதூக்கி வருகிறது.. இது தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

Tamil Nadu electricity issue

மாஸ்டர் மகேந்திரன்

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகரான மாஸ்டர் மகேந்திரன் மின்வெட்டு குறித்துப் பேசிய சில வார்த்தைகள், சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. பொதுமக்களின் அன்றாடப் பாதிப்பை உணராமல் நடிகர் மகேந்திரன் பேசியதாகக் கூறி, நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சோஷயல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர்.

தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், "இவ்வளவு நாட்களாக தமிழ்நாட்டில் கரண்ட் இல்லாமல் நன்றாகத்தானே இருந்தீர்கள், இப்போது 6 மாத காலம் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது என்றால், அதை எதிர்கொண்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அப்படி இல்லாவிட்டால் சோலார் போன்ற மாற்று வழிகளுக்கு மாறியிருக்க வேண்டியதுதானே?

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுப்பது எப்படி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். வேண்டுமானால் என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்து கொள்ளுங்கள்" என்றெல்லாம் பேசியிருந்தார்.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்

மின்வெட்டால் அவதிப்படும் மக்களின் வலியை அலட்சியப்படுத்துவது போல் அமைந்த மகேந்திரனின் இந்த பேச்சுதான் விவாதப் பொருளாக மாறியுள்ளது... மகேந்திரனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து மிகக் கடுமையான விமர்சனங்களும் கேலி கிண்டல்களும் குவிந்து வருகின்றன.

பொதுமக்களின் கஷ்டம் புரியாமல் தற்குறித்தனமாக பேசுகிறார், இன்னும் மாஸ்டர் மகேந்திரன் என்ற நினைப்பிலேயே இருக்காரே? என்று இணையவாசிகள் இவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஒரு பிரபல சேனலுக்கு மாஸ்டர் மகேந்திரன் விரிவான விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அதில், "முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இந்த நிமிடம் வரை எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை, எதிர்காலத்திலும் அப்படி ஒரு எண்ணம் இல்லை.

ஷார்ட்ஸ் வீடியோக்களில் இதுதான் பிரச்சனை

கரண்ட் பிரச்சனைக்கு இந்த குறிப்பிட்ட நபர் அல்லது கட்சிதான் காரணம் என்று நான் யாரையும் சுட்டிக்காட்டிப் பேசவில்லை.. ஆனால் தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய ஷார்ட்ஸ் வீடியோக்களில் இதுதான் பெரிய பிரச்சனை. அதற்கு முன்னாடியும் பின்னாடியும் நான் என்ன பேசினேன் என்ற முழு பின்னணி தெரியாமல், அந்த 20 நொடியில் பேசியதை வைத்துக்கொண்டு வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள்.

வெயில் அதிகமாக இருக்கும் நமது ஊரில், மின்சாரத் தேவையை சமாளிக்க சோலார் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்றுதான் நான் கூற வந்தேன். கேரளாவில் கொச்சின் விமான நிலையம் முழுக்க முழுக்க சோலார் முறையில் இயங்கும்போது, நம்மூரில் அது ஏன் சாத்தியமில்லை என்பதுதான் என் ஆதங்கம். உடனே திமிரா பேசறேன்னும் திட்டித் தீக்குறாங்க. தற்குறின்னு சொல்றாங்க.

நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன், இதற்காகப் பின்வாங்கப் போவதில்லை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+