கூடவே இருந்து குழி..ஆபாச படத்தை வைத்து ஆதினத்துக்கு மிரட்டல்! வாரணாசியில் கைதான ”ஸ்கெட்ச்” செந்தில்
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த ஆதினத்தின் முன்னாள் நேரடி உதவியாளரான செந்தில் வாரணாசியில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆதீனத்தின் கூடவே இருந்து குழி பறித்து ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த செந்தில் கைதானது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான ஆதினங்களில் ஒன்று தருமபுரம் ஆதீனம். இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரம் ஆதினத்தின் சகோதரரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளருமான விருத்தகிரி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
தருமபுரம் ஆதீனம்: அதில் தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. தருமபுரம் ஆதீனத்தை வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும் அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
பாஜக மாவட்ட தலைவர்: இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் முதற்கட்டமாகத் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத் மற்றும் சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தாளாளர் குடியரசு , ஸ்ரீநிவாஸ், ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அகோரம் மற்றும் ஆதீனத்தின் முன்னாள் உதவியாளரான செந்தில் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அகோரம் கைது: மயிலாடுதுறை போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு மார்ச் 15ஆம் தேதி மும்பையில் தலைமறைவாக இருந்த நிலையில் அகோரத்தை கைது செய்தனர். இதனையடுத்து அவர் இரண்டு முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஆதீனத்தின் கூடவே உதவியாளராக இருந்து திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட செந்தில், செம்பனார் கோவில் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், திருச்சி பிரபாகர் ஆகியோர் கைது செய்யப்படாததால் போலீசார் வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.
ஸ்கெட்ச் செந்தில்: இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததன் காரணமாக நிபந்தனை ஜாமீன் மூலம் வெளிவந்தனர். இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான செந்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் முதன் முறையாக முன் ஜாமின் வழங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் கைது செய்யப்பட்டால் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும், எனவே செந்திலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வாதிட்டது.
அதிரடி கைது: இதையடுத்து செந்திலின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் செந்தில் தலைமறைவாக இருப்பதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் செந்திலை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை தமிழகம் அழைத்து வரவுள்ளனர்.
பணம் பறிக்க திட்டம்: பல ஆண்டுகள் தருமபுரம் ஆதீனத்தின் கூடவே இருந்த செந்தில் ஆதினத்திடம் பணம் புழக்கம் இருப்பதை அறிந்து கொண்டு அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கிறார். நித்தியானந்தா விவகாரத்தைப் போல ஆபாச படம் இருப்பதாக மிரட்டி பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்த செந்தில் இதற்காக பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட பலரை தொடர்பு கொண்டு உள்ளார். இதையடுத்தே இந்த மிரட்டல் நாடகம் அரங்கேறியிருக்கிறது. தற்போது செந்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வழக்கு தொடர்பாக மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்!












Click it and Unblock the Notifications