முடியவே முடியாது என்றனர்.. ஒரே கையெழுத்தில் செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சாத்தியமானது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், ஆட்சி வந்த முதல் நாளே அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக 5 முக்கியமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா சிகிச்சை, பெண்கள் முன்னேற்றம், விலைவாசி கட்டுப்பாடு என்று பல விஷயங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

அதேபோல் மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் ரேஷன் கார்டுக்கு பணம் என்ற திட்டத்தையும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

தமிழகத்தில் தேர்தலின் போது ஸ்டாலின் அறிவித்த சில முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் விமர்சனங்களை வைத்தனர். முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் ரேஷன் கார்டில் கொடுப்பது. ரேஷன் கார்ட் உள்ளவர்களுக்கு 4000 ரூபாய் கொடுப்பது, பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச டிக்கெட் என்று ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்றே சிலர் கூறி வந்தனர்.

சாத்தியம் இல்லை

சாத்தியம் இல்லை

முக்கியமாக திமுகவிற்கு எதிராக சில பொருளாதார வல்லுநர்கள், இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று குறிப்பிட்டனர். தமிழக அரசிடம் நிதி இல்லை. தமிழகம் ஏற்கனவே கடனில் இருக்கிறது. இது கொரோனா காலம் வேறு. இப்போது போய் எப்படி இவ்வளவு திட்டங்களுக்கு செலவு செய்ய முடியும்.. காசு எங்கிருந்து வரும் என்று கேட்டனர்.

கடன்

கடன்

இந்த நிலையில், ஸ்டாலின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதற்கு பதில் அளித்த போது, நான் அறிவித்த திட்டங்கள் எல்லாமே நிறைவேற்ற கூடிய திட்டங்கள்தான். இதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் பாருங்கள். பொருளாதார வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துதான் திட்டங்களை அறிவித்தேன், கண்டிப்பாக நிதியை பெருக்கி, வருமானத்தை பெருக்கி, அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

செய்து காட்டினார்

செய்து காட்டினார்

தற்போது ஸ்டாலின் அறிவித்தபடி, முதல்வராக பதவி ஏற்றதும் வரிசையாக 5 முக்கியமான திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அறிவித்து, அந்த திட்டங்களை வெற்றிகரமாக தொடங்கி வைத்துள்ளார். அந்த திட்டங்கள் பின்வருமாறு,

  • கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4000. முதல் கட்டமாக ₹2 ஆயிரம் வழங்கப்படும்
  • நகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்
  • தனியார் மருத்துவமனையில் கொரோனா கட்டணத்தை அரசே செலுத்தும்
  • 100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்க்க -புதிய துறை உருவாக்கம்
  • ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு. (மே16 முதல் அமல்)
எப்படி

எப்படி

தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் முன் ஸ்டாலின் இது தொடர்பாக நிறைய கூட்டங்களை கடந்த 2-3 நாட்களாக அதிகாரிகள் உடன் நடத்தினார். ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தற்போது திட்டங்களை அறிவித்துள்ளார். கண்டிப்பாக நிதியை திரட்ட முடியும், திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று அதிகாரிகளும் ஸ்டாலினுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

திட்டங்கள்

திட்டங்கள்

அதேபோல் வாக்குறுதிகளை வெளியிடும் போதே ஸ்டாலின் அதன் சாத்தியங்களை ஆராய்ந்துவிட்டே அறிவித்தார். இதனால்தான் பலரின் சந்தேங்களை மீறி தற்போது ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக 5 காஸ்ட்லியான அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இப்படி அதிரடி பாதையை கையில் எடுத்து இருப்பது மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+