சென்னைவாசிகளே.. இந்த 2 நாளைக்கு தண்ணீர் வராது.. குடிநீர் சப்ளை நிறுத்தம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு, 6 பகுதிகளில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.. ஏன் தெரியுமா? அந்த 6 பகுதிகள் என்னென்ன தெரியுமா?
கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச்செல்லும், பிரதான உந்து குழாயில் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL), நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த காரணத்துக்காக, சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இன்றும் நாளையும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு இதுதான்:
உந்து குழாய்: "கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 750 மி.மீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மி.மீ., விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் (CMRL) ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், இன்று அதாவது ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 7 மணி முதல் நாளை செப்டம் 1ம் தேதி, பிற்பகல் 3 மணி வரை மண்டலம்-9 (தேனாம்பேட்டை) உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகுறிப்பு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் இணை இயக்குநர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை: மண்டலம்-9 பகுதிகளான நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, இராயப்பேட்டை என சென்னை பெருநகரின் முக்கிய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் குடிநீர் வராது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள், நிறுவனங்கள், முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
லாரி தண்ணீர்: அதுமட்டுமல்ல, அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial For Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று, அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications