ஓவர் ஓவர்.. "மாட்டுக்கறி".. எரியும் முன்னே ஓடிவந்து "அணைத்த" திமுக.. சபாஷ் ஸ்டாலின்.. கூலான கட்சிகள்
பீஃப் ஸ்டால்களுக்கு அனுமதி வழங்கி உள்ள திமுக அரசுக்கு விசிக நன்றி தெரிவித்துள்ளது
சென்னை: "உணவுத்திருவிழாவில் இன்று முதல் சுக்குபாய் பீப் பிரியாணி கடை அனுமதிக்கப்பட்டுள்ளது. சனநாயகத்தை பாதுகாத்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" என்று விசிக உளமார தெரிவித்துள்ளது.
சென்னை தீவு திடலில் சிங்கார சென்னை உணவு திருவிழா 2022 தொடங்கி உள்ளது.. நாளை வரை இந்த உணவுத்திருவிழா நடக்க உள்ளது..
இந்த 3 நாட்களும், தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள், சுவை மிக்க உணவுகள், உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத உணவுகள் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன... மொத்தம் 150 அரங்குகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உணவு திருவிழாவின் முக்கிய நோக்கமே பாரம்பரிய உணவுகள், சிறுதானிய உணவுகளை அவசியம் அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதுதான். அதற்கான விழிப்புணர்வு திருவிழாகவே இது பார்க்கப்படுகிறது.. அதேசமயம், 150 அரங்குகளில் இருந்தும், ஒன்றில்கூட பீஃப் பிரியாணியை காணோமே என்ற சலசலப்பு கிளம்பியது..

ஓனர்கள்
இதை நேற்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், "இதை ஒரு விஷயமாக பெரிசுப்படுத்தாதீங்க.. இந்த திருவிழாவின் நோக்கம் என்னவோ, அதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேருஙகள்.. நான் கூடதான் பீஃப் பிரியாணி சாப்பிடுவேன்.. என்ன சாப்பிட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனி மனித உரிமை... பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்க, கடை ஓனர்கள் அனுமதி கேட்டிருந்தால், நாங்களும் அனுமதி வழங்கி இருப்போம் என்று விளக்கம் தந்திருந்தார்.. அமைச்சர் அப்படி சொல்லியும் இந்த சர்ச்சை ஓயவில்லை..

பர்மிஷன்
"உணவு திருவிழா 2022 ல் மாட்டிறைச்சி அரங்குகளை தமிழக அரசு நிராகரித்ததை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், பீப் ஸ்டால்களை உடனே நிறுவ வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சியும் வேண்டுகோள் விடுத்தது. இதனிடையே நாங்கள் பீப் ஸ்டால் போட ரெடியாக இருந்தோம், ஆனால், பர்மிஷன் தரப்படவில்லை என்று ஒருசிலர் மீடியாக்களுக்கு பேட்டிகளையும் தர ஆரம்பித்தனர்.. இதற்கு நடுவில் விசிகவும் கேள்வி எழுப்பியது..

மாட்டிறைச்சி பிரியாணி ஸ்டால்
உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி அரங்கம் அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என அதிகாரிகள் சொல்லுவது சரியா? அப்படி யாரிடம் கேட்கப்பட்டது? உணவு வகைகளில் மாட்டுக்கறி பிரியர்களுக்கு இடமில்லையா? அல்லது மாட்டுக்கறி பிரியாணிக்கு தடையா? விளக்கம் கிடைக்குமா? என்று கேட்டது.. கூட்டணி கட்சி முதல் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து, திமுக அரசு, இதற்கு அனுமதி வழங்கி உள்ளது.. இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீஃப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகிஉள்ளது.. இதற்கு முதல் நபராக வாழ்த்து சொல்லி நன்றியும் தெரிவித்துள்ள விசிக..

பீஃப் கடைகள்
"உணவுத்திருவிழாவில் இன்று முதல் சுக்குபாய் பீப் பிரியாணி கடை அனுமதிக்கப்பட்டுள்ளது. சனநாயகத்தை பாதுகாத்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" என்று விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பதிவிட்டுள்ளார்... வன்னியரசுவின் இந்த ட்வீட்டுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "அண்ணா உங்கள் போராட்டமே எங்களை மனிதராக்குகின்றது" என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. மேலும் சிலர், "இப்படி அனுமதி பெற்று தான் பீஃப் பிரியாணி வைக்க வேண்டுமா?.. அதுவும் தமிழ் நாட்டில்.. இதற்கு வெட்கப்பட வேண்டும்" என்றும் விமர்சித்து வருகின்றனர்.

பீஃப் பிரியாணி
இத்தனை காலமும் வடமாநிலங்களில் மட்டுமே சர்ச்சையை கிளப்பி வரும் மாட்டிறைச்சி விவகாரம், சமீபகாலமாக, நம்முடைய தமிழகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஏற்கனவே ஆம்பூர் பிரியாணி திருவிழாவிலும் இப்படித்தான் பீப் பிரியாணி விவகாரம் தலைதூக்கியது.. ஆம்பூர் என்ன வடஇந்தியாவிலா இருக்கிறது என்ற கேள்விகள் வெடித்தன.. பீப் பிரியாணி வேண்டும் இல்லை என்றால், நாங்கள் இலவசமாக பீப் பிரியாணி வழங்குவோம் என விசிக, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்து அறிவித்தன..

பீஃப் ஸ்டால்
அதுமட்டுமல்ல, இங்கே திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதித்துவிட்டு, ஆவடி அருகே 25 ஏக்கர் அளவில் பசு மடங்களை அமைக்கவிருப்பது குறித்து திராவிட மாடல் என்று கூறும் ஆளுங்கட்சியினர் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்ற கேள்வியும் சமூகவலைதளங்களில் எழுந்தன.. ஆம்பூர் பிரியாணி விவகாரத்தில் திமுக மீது அப்போது ஏற்பட்ட அதிருப்திகள் அனைத்தும், இந்த முறை சென்னை உணவு திருவிழாவில் நொறுங்கிவிட்டதாகவே தெரிகிறது..

சலசலப்பு
மேலும், மாட்டிறைச்சி விவகாரத்தில் எந்தவித சலசலப்புக்கும் இடமளிக்காத வகையில், அவைகள் உடனுக்குடன் சுமூக முடிவுக்கும் கொண்டு வரப்பட்டு விடுகின்றன.. மொத்தத்தில், இந்த ஒரு விஷயத்தை வைத்தே, அரசியல் செய்ய நினைத்த ஒருசிலர் வாயையும் டப்பென அடைத்துள்ளது திமுக அரசு.. அந்தவகையில், ஸ்டாலினுக்கு பலரும் நன்றிகளை சொல்லி வருகிறார்கள்..
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications