ரேஷன் வாங்கியாச்சா? அரிசி அட்டைதாரர்களுக்கு வந்த சிக்கல்.. இன்றே ரேஷனை வாங்கிடுங்க.. வந்தது அறிவிப்பு
சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் நாளை 5-ம் தேதி வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளின் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை சேதாரமின்றியும் தரமாகவும், பாதுகாப்பாகவும் வழங்கும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.. ஆனால், ரேஷன் ஊழியர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுகோள்களை விடுத்தபடி உள்ளனர்.

காரணம், ரேஷன் ஊழியர்களை பொறுத்தவரை, அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை, நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்..
அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உட்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களையும், மாவட்டங்களில் முன்னெடுத்து வருகிறார்கள்..
எனினும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்பதால், இப்போது மறுபடியும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அந்தவகையில், நாளை செப்டம்பர் 5-ந்தேதி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.. தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடை பணியாளர்களும் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிகிறது.
பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 5-ம் தேதி வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது சொன்னதாவது: "தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் பொது விநியோகத் திட்டம். இந்தத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. இவற்றை களையக் கோரி பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்துள்ளோம். குறிப்பாக, சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் 100 சதவீதம் ஒதுக்க வேண்டும்.
வெளிமாவட்ட வெளியூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 10 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும்.
பாமாயில், துவரம் பருப்பு விநியோகத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஏற்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில், நடமாட்டப் பணியாளர் நியமித்து எடை தராசு வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை இறக்குவதற்கு கட்டாய இறக்குக் கூலி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நாளை ஸ்டிரைக்: நியாய விலைக் கடைகளில் எஃப்.பி.எஸ் செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட்டு, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ம் தேதி ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications